2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

யாழில் மீண்டும் ஞானம்ஸ் ஹோட்டல்

A.P.Mathan   / 2011 மே 04 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்தின் மணிக்கூட்டு வீதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த ஞானம்ஸ் ஹோட்டல் அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த 24 வருடங்களாக மூடப்பட்டிருந்தது. 1995ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவத்தினர் இந்த ஹோட்டலினை பயன்படுத்தி வந்தனர். இதற்காக சுமார் 40,000 ரூபா வாடகையாக செலுத்தியும் வந்தனர். அதன் பின்னர் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஞானம்ஸ் ஹோட்டல் வந்தமையால் முற்றாக இதன் நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருந்தன.

கடந்த முதலாம் திகதிமுதல் புதிய நிர்வாகத்தின் கீழ் ஞானம்ஸ் ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டது. யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க வைப்பவ ரீதியாக ஞானம்ஸ் ஹோட்டலினை திறந்து வைத்தார்.

மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஞானம்ஸ் ஹோட்டலில் 30 அறைகள் இருக்கின்றன. இதில் குடும்பத்துடன் தங்கக்கூடிய விசாலமான அறைகளும் உள்ளடங்குகின்றன. இந்த அறைகளில் அனைத்து வசதிகளும் இருக்கின்றமை சிறப்பானதாகும்.

சிறந்த அனுபவமுள்ள சமையல் கலைஞர்களினால் அனைத்துவிதமான உணவுகளும் இங்கு பரிமாறப்படுகின்றன. அத்தோடு யாழ்ப்பாணத்தில் சுற்றுலா பயணிகள் பார்க்கக்கூடிய இடங்களுக்கான போக்குவரத்து வசதிகளையும் இவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள்.

யாழ். மண்ணின் பாரம்பரிய உணவுகள் மற்றும் நடைமுறைகளை இந்த ஞானம்ஸ் ஹோட்டலிலே கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கின்றமை சிறப்பானதாகும்.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள ஞானம்ஸ் ஹோட்டலுடன் 021 2220630 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .