Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
A.P.Mathan / 2013 ஜனவரி 02 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
theepan Sunday, 06 January 2013 07:22 PM
அருமையான கதை முஸ்டீன், உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தி விட்டடீர்கள். ஆர்வமாக வாசிக்கத் தூண்டுகிறது. தொய்வில்லாத மொழிநடை. வாழ்த்துக்கள். உங்களின் இரண்டு கதைகள் மட்டும்தான் படிக்க முடிந்தது, வலைப்பூ சுட்டி இருந்தால் தாருங்கள். ஏனைய கதைகளையும் படிக்க ஆர்வமாக இருக்கிறது.
Reply : 0 0
varanyooran -junior Saturday, 12 January 2013 04:13 PM
முஸ்டீன்! அற்புதமான கதை, கதையின் ஊடாக உணா்வுகளை மட்டுமல்ல உண்மைகளையும், தகவல்களையும் லாவகமாக பரிமாறியிருக்கிறீா்கள். சொல்லவேண்டிய பலவிடயங்களை பிரசாரத்தொனியின்றி கதையின் கட்டமைப்பு சிதையாமல் அற்புமாக சொல்லியிருக்கிறீா்கள். தடுப்புக்காவலில் இருப்பவரை கூடுவரையில் வந்து உறவினா்கள் பார்க்க முடியும் என்பது சரியா? உங்கள் தேடலும் பகிர்வும் தொடர ஆண்டவர் உங்களோடும் இருக்கட்டும். இந்தக்கதையை எனது தளத்தில் பகிர்ந்துள்ளேன்.
Reply : 0 0
musdeen Monday, 14 January 2013 06:35 PM
தடுப்புக் காவலில் எனக்கு நேர்ந்த அனுபவத்தைத்தான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எனவே இதில் எந்தவிதமான தேடல் குறைபாடும் ஏற்படவில்லை என்று உறுதி கூறுகிறேன். இதில் சொல்லப்படாத இன்னும் பல சுவாரசியமான விடயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிரிதொரு கதையில் எழுதியிருக்கிறேன். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவலில் நான் இருந்தபோது அங்கிருந்தே எழுதியதுதான் இக்கதை. அங்கிருந்த போது முதலாவது எழுதிய கதைதான் குப்பைவாளி. அதுவும் தமிழ் மிரரில் இருக்கிறது. இரண்டினையும் கொஞ்சம் அமைதியாக இருந்து இணைத்துப்பாருங்கள் பல உண்மைகள் தெரியும்.
அடுத்தது தீபன் இன்னும் சில கதைகள் மட்டுமே வலைப்புவில் பதிவேற்றப்பட்டுள்ளன, தமிழ் மிரர் அனுமதித்தால் அதன் சுட்டியைக் குறிப்பிடுகிறேன். இம்மாதம் இறுதியில் ஹராங்குட்டி என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட இருக்கிறேன் அதில் படிக்கலாம்
முஸ்டீன்
Reply : 0 0
anas Tuesday, 15 January 2013 09:04 AM
குப்பைவாளி, அவன்தான் மனிதன் இரண்டும் நமது சிறுகதைத் தளத்தில் புதிய கதைக் களம் என்று கருதுகிறேன். தடுப்புக்காவலில் உள்ளவர்கள் பல்லாயிரம் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு கொடுமை அனுபவித்தவர்களும் ஏறாளம், இரண்டு கதைகளிலும் மிக லாவகமாக பல தகவல்களை நகர்த்தியிருக்கின்றீர்கள். பௌத்த தர்மம் பற்றித் தெரியாது அதைப் பின்பற்றும் பொளத்தரகளுக்கு மட்டுமல்ல வெறுமனே முஸ்லிம் பெயர் தாங்கியவர்களுக்கும் பலத்த அடி.
நாட்டின் சமகால பிரச்சினைகளை நகர்த்தும் பாங்கே தனி. எல்லா இடங்களிலும் வைக்கப்படும் புத்தர் சிலைகள் பற்றியும், அப்படி வைக்கப்படுவது உண்மையில் புத்தர்தானா என்பதும் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பி விடக் கூடிய விடயங்கள் இரண்டு கதைகளும் கட்டாயம் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிவை.
Reply : 0 0
முஸ்டீன் Tuesday, 15 January 2013 08:32 PM
அனுபவங்களைப் பகிரும் போது அது ஒரு தனிச் சுகம்.
Reply : 0 0
சுதாராஜ் Monday, 25 February 2013 03:00 PM
முஸ்டீனின் ஏனைய கதைகளையும் வாசித்திருக்கிறேன். நேரடியாகவோ மறைமுகமாகவோ யுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட, பல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், அட்டூளியங்கள், மனித வதைகள், அழிப்புக்கள் பற்றியெல்லாம் அவரது கதைகள் சித்தரிக்கின்றன. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்துக்குரியவர்களாகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டவர்களின் மனவலியை உணர்வோட்டத்துடன் வெளிப்படுத்தும் கதைகளையும் எழுதியிருக்கிறார். போர்கக்காலத்தின் துயரமான வாழ்வனுபவங்களை தனது கொந்தளிப்பான எழுத்துக்கள்மூலம் தரும் இளம் எழுத்தாளர் முஸ்டீன், தமிழ் சிறுகதைத்துறைக்கு இன்னும் புதிய களங்களைக் கொண்டுவரும் எழுத்தாளராக மிளிர்வார் என்றே நம்புகிறேன்.
Reply : 0 0
முஸ்டீன் Wednesday, 20 March 2013 04:20 AM
நான் நேசிக்கும் மிகச் சிறந்த சிறுகதையாசிரியரிடமிருந்து வந்த இந்த வார்த்தைகளைப் பார்க்கும்போது என் எழுத்துக்கள் மீது இன்னும் நம்பிக்கை வலுக்கிறது.
-முஸ்டீன்
Reply : 0 0
maheesh Thursday, 30 May 2013 11:05 AM
இது இஸ்லாத்துக்கு ஆதரவான பிரசாரம். கதையல்ல. கடவுளும் சரி (சிவன், ஜீஸஸ், அல்லாஹ்) மதமும் சரி மனிதனையும், மனிதனேயத்தையும் வளர்க்க வேண்டும். அதற்காகத்தான் கடவுளையும் மதத்தையும் மனிதன் கண்டு பிடித்தான். இன்று நிலைமை மனிதனுக்கு மத வெறி பிடித்தது தான் மிச்சம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago