Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 31, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 பெப்ரவரி 27 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுரகுமார ‘சகோதரர்கள்’ நடத்தும் திசைக்காட்டியின் ஆட்சியில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் பாதாளக் குழுக்களிடையிலான பழிவாங்கும் வேட்டைகளினால் கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் 8க்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ள நிலையில், முழு நாடும் மக்களும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உறைந்து போயுள்ளனர். நாட்டின் பாதுகாப்பும் மக்களின் பாதுகாப்பும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் டிரான் அலஸ் ப ொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது, முன்னெடுக்கப்பட்ட பாதாளக்குழுக்களுக்கு எதிரான ‘யுக்திய’ நடவடிக்கையினால் பாதாள குழுக்களின் தலைவர்கள் பலர் நாட்டை விட்டுத் தப்பியோடியும் அதன் உறுப்பினர்கள் தமது பாதாள வேலைகளைக் கை விட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடித் தலைமறைவாகியிருந்தனர். ‘யுக்திய’ நடவடிக்கையினால் பாதாளக் குழுக்கள் ‘கிளீன்’ செய்யப்பட்டன. ஆனால், அப்போது பாதாளக் குழுக்களுக்கு எதிரான ரணில் விக்ரமசிங்க அரசின் ‘யுக்திய’ நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தவர்களில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) தேசிய மக்கள் சக்தியும் முதன்மையானவர்களாக இருந்தார்கள்.மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் ‘யுக்திய’ என்ற பெயரில் அப்பாவிகள் பழிவாங்கப்படுவதாகவும் கொல்லப்படுவதாகவும் சிறைகளில் அடைக்கப்படுவதாகவும் கூக்குரலிட்டார்கள். ஆனால், ப ொதுமக்கள் மத்தியில் ‘யுக்திய’வுக்கு பேராதரவு இருந்தது. இவ்வாறான நிலையில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றோம், மக்களுக்கும் நாட்டுக்கும் புதிய திசையைக் காட்டப்போகின்றோம் என்று தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து மக்களுக்கு நம்பிக்கையூட்டி நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அனுரகுமாரவும் சகோதரர்களும் அரியணை ஏறினர்.
அவர்கள் கூறியது போல, நாட்டின் ‘மாற்றம்’ ஏற்பட்டது. ஆனால், அந்த ‘மாற்றம்’ அவர்கள் கூறிய மக்களுக்கான மாற்றமாகவன்றி, மக்களைக் கொல்லும், மக்களை வதைக்கும், மக்களை ஏமாற்றும் மாற்றமாகவே அது உள்ளது. நாட்டில் அரிசித் தட்டுப்பாடு, தேங்காய்த் தட்டுப்பாடு, அத்திவாசியப் ப ொருட்களின் ஏறிய விலைகள் குறையாமை, உணவுப் ப ொருட்களின் விலைகள் அதிகரிப்பு என மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அதிகரித்து வந்த அனுரகுமார அரசு ரணில் ஆட்சியில் காணாமல் போயிருந்த பாதாளக் குழுக்களையும் தற்போது கட்டவிழ்த்து விட்டு நீதிமன்றத்தின் சாட்சி கூண்டுக்குள், நீதிமன்றத்தின் வாசலில் படுகொலைகளைச் செய்யுமளவுக்குப் பாதாளக் குழுக்களுக்குச் சுதந்திரத்தை , தைரியத்தை வழங்கியுள்ளது. பாதாளக் குழுக்கள் சுதந்திரமாக நடமாடி நடத்தும் கொலை வெறியாட்டத்தினால் கடந்த ஒரு வாரத்தினுள் மட்டும் 8 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாதாளக் குழுக்கள் மீண்டும் தலைதூக்கி நடத்தும் கொலை வெறியாட்டத்தினால் நாட்டின் பாதுகாப்பு பேராபத்துக்குள் சிக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்ற நிலையில், “இது பாதாளக் குழுக்களிடையில் நடக்கும் மோதல். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை” என அனுரகுமார அரசு கூறுகின்றது. எதிர்க்கட்சிகளுக்கு வேறு விடயங்கள் இல்லாததால் இதனைத் தூக்கிப் பிடிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றது. கடந்த ஒரு வாரத்தில் பாதாளக் குழுக்களினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 8 பேரில் இரு குழந்தைகள், ஒரு அப்பாவித் தமிழ் இளைஞனும் அடக்கம். படுகொலை செய்யப்பட்ட இரு குழந்தைகளும் பாதாளக் குழு உறுப்பினர்களாக இருக்க முடியாது. அதேவேளை, கொட்டாஞ்சேனையில் கடைக்குள் வைத்து சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன், எந்த வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவர் என ப ொலிஸ் தரப்பே உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் பாதாளக் குழுக்களினால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும், மக்களின் பாதுகாப்புக்கும் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதே.இதற்கு அனுரகுமார அரசு என்ன கூறப்போகின்றது? இந்த ஆண்டு மட்டும் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பதில் ப ொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.இதேவேளை, குறித்த சம்பவங்களில் ப ொலிஸார் மற்றும் முப்படைகளில் உள்ளவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ளதாகவும், அதன்படி, அவ்வாறானவர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இலங்கையில் 58 பாதாள குழுக்கள் செயல்படுகின்றன. அந்த குற்ற வலையமைப்புக்குள் 1,400 பேர்வரை இடம்பெற்றுள்ளனர் என்று பதில் ப ொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்தே பாதாள குழுக்களை வழிநடத்துகின்றனர் என்கிறார். பதில் ப ொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மட்டுமல்ல, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தாவும் ப ொருளாதார நெருக்கடி மற்றும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக இராணுவ வீரர்கள் பாதாளக்குழுக்களுடன் தொடர்பில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறுகின்றார். அத்துடன், சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் உறுதிப்படுத்துகின்றார். இதேவேளை, பாதுகாப்புப்படைகளிலிருந்து விடுமுறையில் வந்து ஒப்பந்தக் கொலைகளைச் செய்து விட்டு மீண்டும் பணிக்குத் திரும்பும் பாதுகாப்புப் படையினர் பலர் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. அவ்வாறானால், பாதுகாப்புப் படைகளில் உள்ளவர்களே பாதாள உலகக் குற்றங்களில் ஈடுபடுவது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா? பணத்துக்காகப் படுகொலை செய்யும் இவ்வாறான பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களை வெளிநாடுகளில் இருந்தே வழி நடத்துகின்றார்கள் என்றால் வெளிநாடுகளின் பணத்துக்காகப் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த இவ்வாறானவர்கள் நாட்டைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் அனுரகுமார அரசிடம் உள்ளதா? திட்டமிட்ட குற்றச் செயல்களின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கம்பஹா நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்படுவார்
என்ற தகவல் முன்னர் கிடைத்திருந்ததாகப் பதில் ப ொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவிக்கின்றார். புதுக்கடை நீதிமன்றத்தினுள் படுகொலை செய்யப்படும் சம்பவத்திற்கு முன்னர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கணே முல்லா சஞ்சீவவை படுகொலை செய்ய முயற்சிப்பது குறித்து தகவல் கிடைத்ததாகவும் அதன்படி, புதுக் கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கணேமுல்ல சஞ்சீவவை கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால், அவருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா பிரிவுக்குப் ப ொறுப்பான அதிகாரிகளுக்குத் தகவல் அளித்து, கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சாட்சியங்களின் தொழில்நுட்ப பரிசோதனையை நடத்துமாறு நீதவானிடம் தெரிவித்ததாகவும் பதில் ப ொலிஸ் மா அதிபர், பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவிக்கின்றார். கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தினுள் வைத்து படுகொலை செய்யப்போகும் திட்டத்தை முன்கூட்டியே அறிந்திருந்தும் அவரது உயிரை ப ொலிஸாரால் பாதுகாக்க முடியவில்லை. மித்தெனியாவில் வைத்து அருண விதானகமகே என்பவரும் அவரது இரு குழந்தைகளும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட அருண விதானகமகே ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தில் இரு நபர்களைக் கொலை செய்தவர் என்றும் ராஜபக்ஷக்களின் கொலைக் கருவி அவர் என்றும் அவர் பல கொலைகளுடன் தொடர்புபட்டவர் என்றும் தகவல்கள் உள்ளன. இவ்வாறான நிலையில், தான் பலதகவல்களை வெளியிட்டுள்ளதால் தனது உயிருக்கு ராஜபக்ஷக்களினால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தான் எந்த வேளையிலும் கொல்லப்படலாம் , ஏன் நாளைக்குக் கூட கொல்லப்படலாம் என இந்த அருண விதானகமகே ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த சில நாட்களுக்குள்ளேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். ஆக, கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தினுள் வைத்து படுகொலை செய்யப்போகும் திட்டத்தை முன்கூட்டியே அறிந்திருந்தும், அவரது உயிரை ப ொலிஸாரால் பாதுகாக்க முடியாத, அருண விதானகமகே தான் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் என கூறியிருந்தும், ராஜபக்ஷக்களின் குற்றங்களின் முக்கிய சாட்சியான அவரது உயிரைப் பாதுகாக்க முடியாத ப ொலிஸாராலும், அனுரகுமார அரசின் பாதுகாப்பு அமைச்சினாலும் எவ்வாறு நாட்டின் தேசியப் பாதுகாப்பையும் மக்களின் உயிர் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்? கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தினுள் வைத்து படுகொலை செய்யும் திட்டத்தை வழி நடத்திய 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி எனும் பெண்ணை அனுரகுமார அரசின் பாதுகாப்புப்படைகள் இத்தனை நாட்களாகத் தேடி வருகின்றன. அந்தப் பெண்ணின் புகைப்படங்களை மட்டும் தான் இவர்களினால் கண்டுபிடித்து வெளியிட முடிகின்றதே தவிர, தைரியமாக,நேரடியாக புதுக்கடை நீதிமன்றத்தினுள்ளே சென்று படுகொலைத் திட்டத்தை வழி நடத்தி தனது முகத்தையும் எந்தவித அச்சமுமின்றி சிசிடிவிக் கெமராக்களுக்கு காட்டிச்சென்ற இஷாரா செவ்வந்தியையே இன்றுவரை கைது செய்ய முடியாத அநுரகுமார அரசின் பாதுகாப்புப் படைகளினால் எப்படி நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago