Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஜூன் 14 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்திய கலாநிதி. சுலோசனா பஞ்சராசா BSMS(Jaf)
சிவா சித்த வைத்திய மையம், கைதடி
Member of Jaffna Science Association, Section C
சித்த மருத்துவத்தின் பிரகாரம் முத்தாதுக்கள் (வாதம், பித்தம், கபம்), ஏழு உடற்தாதுக்கள் (சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மச்சை, சுக்கிலம்/ ஆர்த்தவம்) என்பன சமநிலையில் பேணப்பட்டு அக்கினியானது நன்நிலையில் தொழிற்பட்டு மும்மலங்கள் (சிறுநீர், வியர்வை, மலம்) நல்லமுறையில் வெளியேறி ஆன்மா மற்றும் ஐம்பொறிகளும் நன்னிலையில் செயற்படுவதே ஆரோக்கியம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
வாத, பித்த, கப தோஸங்களில் உணவாதி செயல்களால் ஏற்படுகின்ற மாறுபாடு காரணமாகவே நோய்கள் ஏற்படுகின்றன. இத் தோஸங்களைச் சமநிலையில் பேணுவதன் மூலம் நோய்களைக் குணமாக்க முடியும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
கபதோஸமானது இதயத்திற்கு மேற்பகுதியிலும், பித்த தோஸமானது இதயத்திற்கும் நாபிக்கும் இடைப்பட்ட பகுதியிலும் வாத தோஸமானது நாபிக்கு கீழ்பகுதியிலும் காணப்படும்.
இரத்தத்தில் உள்ள பித்த தோஷத்தை வெளிப்படுத்த இரத்த மோட்சனம் மேற்கொள்ளப்படுகிறது.
இவ் இரத்த மோட்சனமானது 3 விதமாக மேற்கொள்ளப்படுகின்றது.
1. கொம்பு உறிஞ்சல் - குழாய் போன்ற கருவியால் இரத்தத்தை உறிஞ்சி எடுத்தல்.
2. நாளத்தைக் கீறி வெளியேற்றுதல் - கார் இரத்தக்குழாய்களை கீறி இரத்தத்தை வெளியேற்றல்.
3. அட்டை விடுதல்.
அட்டை விடுதல்
அட்டை விடல்மருத்துவத்தின் பலன் “அமிர்தம்” உட்கொண்டதற்கான பலனாகும். இது பாதுகாப்பான வலியற்ற சிகிச்சை முறையாகும். இச் சிகிச்சை முறைக்காக வாழ்க்கை முறைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இச் சிகிச்சையில் ஒரு நோயாளிக்கு பயன்படுத்திய அட்டை மற்றொரு நோயாளிக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. இச் சிகிச்சையின் போது அசுத்த இரத்தத்தை அட்டை உறுஞ்சுவதுடன் தனது உமிழ்நீரை இரத்தத்துள் செலுத்துகின்றது. அட்டையின் உமிழ்நீரில் உள்ள ர்சைரனin என்னும் வேதியல் பொருள் இரத்தம் கட்டிபடுவதைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்தினைப் பேணுகின்றது.
அட்டை விடுதலின் பின்வரும் நன்மைகள் ஏற்படுகின்றன.
(1) வீக்கம் குறைகின்றது.
(2) நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
(3) இரத்த நாளங்கள் சீர்செய்யப்படுகின்றது.
(4) இரத்த ஓட்டம் சீர்செய்யப்படுகின்றது.
(5) மனஅழுத்தம் குறைகின்றது.
(6) இரத்த நாளங்களில் இரத்தம் உறைதலை சரிசெய்யும்.
(7) வலி நிவாரணியாகப் பயன்படுகின்றது.
(8) பிற சுத்திகரிப்பு சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடும்போது அட்டைவிடுதல் தேவையற்ற தழும்பு, எரிச்சல், நிறமாற்றம் போன்றவை ஏற்படுவது குறைவு.
(9) தோலில் ஏற்படும் வீக்கம், வலி, அரிப்பு, எரிச்சல், தழும்புகள் போன்றவை இச் சிகிச்சை முறையால் சரிசெய்யப்படுகின்றது.
அன்னப்பறவை நீர் கலந்த பாலிலுள்ள நீரைப் பிரித்துப் பாலைப் பருகுவது போல உடலிலுள்ள நச்சுநீரைப் பருகி, குருதியைத் தூய்மைப்படுத்துவதற்காக அட்டை விடப்படுகின்றது.
அட்டைகளில் பல வகைகள் காணப்பட்ட போதிலும் இச் சிகிச்சை முறைக்காக Hirudine medicinalis எனப்படும் அட்டை வகையே பயன்படுத்தப்படுகின்றது.
இதிலும் தீவிரநோய் நிலைமைகளில் ஆண் அட்டையும், சாதாரண நோய் நிலைமைகளில் பெண் அட்டையும் பயன்படுத்தப்படுகின்றது.
அட்டைகளைத் தெரிந்தெடுக்கும் முறைகள்
அட்டைகளில் நல்ல அட்டைகள், தீய அட்டைகள், சாதாரண அட்டைகள் என மூன்று பிரிவுகள் காணப்படுகின்றன. சாதாரண அட்டைகளே சிகிச்சைக்கு கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இவை பொன்நிறத்தில் சற்று கருமைநிறம் சேர்ந்தவையாகவும், ஐந்து சென்ரிமீற்றர் நீளமுள்ளவையாகக் காணப்படும். நன்னீரில் காணப்படும் அட்டைகளே சிகிச்சைக்கு பயன்படுகின்றது.
அட்டைகள் பயன்படுத்தக்கூடிய நோய் நிலைமைகள்
1. உயர் குருதி அமுக்கம் (Hyper tension)
2. அக்கி (Ace)
3. காளாஞ்சு படை (Psoriasis)
4. கரப்பன் (eczema)
5. சதையி இல் ஏற்படும் தாபிதம் (Pancreatitis)
6. வயிற்றுப் புண் / குன்மம் (Gastric ulcer)
7. சிரத்தம்ப வாதம் (Cerebral palsy)
8. மூலரோகம் (Hemorrhoids)
9. சர்மரோணங்கள் (Skin diseases)
10. அசுத்த விரணம்
11.நாளப் புடைச்சல் (Varicose ulcer)
12.வழுக்கை (Alopecia)
13.யானைக்கால் (Elephantiasis)
14.வெண்குஷ்டம் (Vitiligo)
15. நாட்பட்ட புண் (Chronic wound)
இந்த வகையில் அட்டை விடுதல் சிகிச்சை முறையானது நாளப்புடைச்சல் (Varicose Vein), நாளப்புடைச்சல் புண் (Varicose ulcer), கால் வீக்கம் (ankleoedema), வீக்கம் (swelling), சர்மரோகம் (skin disease) போன்ற நோய்களுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுவதுடன் நோயாளர்கள் அதிகளவில் குணமடைவதையும் அவதானிக்க முடிகின்றது.
அட்டைவிடுதல் செய்முறை மேற்கொள்வதற்கு முன்னர் நோயாளியில் குருதி அமுக்கம் (Blood Pressure), குருதி உறையும் நேரம் (Clotting time), Full Blood Count ஆகிய பரிசோதனைகள் மேற்கோள்ளப்பட வேண்டும்.
நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து 5 – 10 தடவைகள் அட்டை விடல் சிகிச்சை மேற்கொள்ளலாம். ஒருமுறை அட்டைவிடல் மேற்கொண்டால் 7 நாட்களின் பின்னரே அட்டைவிடல் மேற்கொள்ளவேண்டும்.
எனவே வலியை ஏற்படுத்தாத அட்டைவிடல் சிகிச்சை முறை மூலம் நோய்களை குணமாக்கி ஆரோக்கியத்தைப் பேணுவோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago