2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

கோணமலை கொடுத்த தமிழ்க்கோன்

Mayu   / 2024 ஜூலை 03 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சயனிகா சிறிகாந்த்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவி

ஒருவரின் நல்ல பக்கங்களை மட்டும் நினைவு கூற செய்வது இறப்பின் சிறப்பு.

விமர்சனங்களுக்கு அப்பால் ஈடு செய்ய முடியாத பெரும் வெற்றிடத்தை நிரந்தரமாகி சென்றிருக்கிறார் ஐயா.....

வாதப்பிரதிவாதங்களை தாண்டி தமிழர் பரப்பிலே அதியுச்ச அங்கீகாரத்தையும் அவமதிப்பையும் ஒரு சேரப்பேற்ற ஒரே தலைமை! தவிர்க்க முடியாத ஆளுமை அந்த நாமம் - இரா சம்பந்தன். இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்ரூபவ் எம்பியமான இரா சம்பந்தன் ஐயா உடல் நலக்குறைவு காரணமாக 30 6 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

 அவருக்கு வயது 91. வயது மூப்பு காரணமாக ஐயா, சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போதிலும் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் . மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothayam Sampanthan - பிறப்பு - 5 பெப்ரவரி 1933) - இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் ஆவார். 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக்

கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும்ரூபவ் 1983 கறுப்பு சூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்.

அதன் பிறகு 2001ஆம் ஆண்டில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத படியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது.

சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் பாராளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டினை முன்னெடுத்தது. இந்நிலைப்பாட்டுக்கு தவிகூ தலைவர் வி. ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்துடன்ரூபவ் 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை.

இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2015 தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக),  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன.

 இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி (Illankai Tamil Arasu Kachchi- ITAK, முன்னாள் சமஷ்டிக் கட்சி, Federal Party) இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசியற் கட்சியாகும். இக்கட்சி 1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்டது.

1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் இக்கூட்டணியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றப்பட்டது.

2004 ஆம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த வீ. ஆனந்தசங்கரி பிரிந்து சென்றதை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

தற்போது இக்கட்சி இலங்கையின் வட,  கிழக்கு மாகாணங்களில் பலமான ஓர் அரசியல் கட்சியாக விளங்கி வருகிறது. இக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பின் முக்கிய உறுப்புக் கட்சியாகவும் தற்போது உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance- TNA) என்பது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இது இலங்கைத் தமிழ் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இக்கூட்டணி மிதவாதத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் முன்னாள் போராளி இயக்கங்கள் சிலவும் இணைந்து 2001 அக்டோபரில் அமைக்கப்பட்டது.

இந்த கூட்டணி ஆரம்பத்தில் இலங்கைத் தீவின் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற ஒரு தன்னாட்சி மாநிலத்தில் சுயநிர்ணயத்தை ஆதரித்தது. இலங்கையில் உள்நாட்டுப் போரைத் தீர்க்க ஆயுதப் போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை அது ஆதரித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகளாக பெரும்பான்மையினரின் மத்தியில் கருதப்பட்டாலும், அதன் தலைமை ஒருபோதும் தாம் புலிகளை ஆதரிக்கவில்லை எனவும், அரசாங்கத்தைப் போலவே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்து வந்தது.

2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்து, விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியரசுக்கான கோரிக்கையைக் கைவிட்டு, பிராந்திய சுயாட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

அத்துடன் வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் 33 உள்ளூராட்சி சபைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்பந்தன் உள்ளார். இவர் செப்டம்பர் 2015 முதல் 2018 டிசெம்பர் வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர் 2020 ஆம் ஆண்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு அவர் தெரிவானார்.

இதே வேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக சம்மந்தன் ஐயா அவர்களுக்கு மூன்று மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. சுகவீனமடைந்துள்ள மையினால் அவருக்கு விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே உடல் நலக் குறைவு காரணமாக அண்மைய நாட்களாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை (30.6.2024) காலமானார். ஐயாவின் பூத உடல் அஞ்சலிக்காக கொழும்பில் மலர் சாலையில் வைக்கப்பட்டு அதன் பின்னர் அவரது பூத உடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

 மற்றும் ஐயாவின் பூதவுடல் இறுதிகிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத நாட்டுக்குள் தமிழர்களுக்கான சம உரிமைகளை கோரி தொடர்ந்தும் பாராளுமன்றில் குரல் கொடுத்து வந்திருந்த அவர் தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவர் ஆவார்.

இந்த தலைமைத்துவ வறட்சியின் பிரதிபலனை இன்னும் தீவிரமாக இதுவரை அனுபவித்ததை காட்டிலும் தமிழர் தரப்பும் குறிப்பாக திருகோணமலை சமூகமும் விரைவில் உணர்ந்தே தீரும்.

03.07.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X