2025 மார்ச் 31, திங்கட்கிழமை

கவனமாக கையாளப்பட வேண்டிய விவகாரம்

R.Tharaniya   / 2025 மார்ச் 11 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பாகப்பலவிதமானகருத்துகள்பொதுவெளியில்சொல்லப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதற்கிடையில் ‘முஸ்லிம் அடிப்படைவாதம்’ பற்றிய கதைகளும் உத்தியோகப்பூர்வமாக மேலெழுந்துள்ளன.
 
நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை என்பது ஐம்பது ஆண்டுகளாகக் கரிசனைக்குரிய விடயமாகவே இருக்கின்றது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு அண்மைக்காலமாக இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இது வேறு ஒரு உருவத்தை எடுத்திருப்பதான தோற்றப்பாடும் ஏற்பட்டுள்ளது. 
ஆனால், வழக்கமாக ஏனைய அரசாங்கங்களைப் போலவே ஜனாதிபதி அனுரகுமார திசாயநாயக்க தலைமையிலான என்.பி.பி. அரசாங்கமும் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சொன்னது. சொல்கின்றது.
 
கொழும்பின் நீதிமன்ற வளாகத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் ‘துப்பாக்கிகள்’ சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த போதும், அரசாங்கம் இப்படியொரு கருத்தையே வெளியிட்டது. அதாவது, “மக்கள் அச்சப்படும்படியான பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்று இல்லை” என்றே அரசாங்கம் கூற வருவதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
 
இவ்வாறான ஒரு சூழலில்தான், முதலில் அரசாங்கம், கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள் தோற்றம் பெறுவதாகவும், அது தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.  கிழக்கு மாகாணத்திலோ அல்லது நாட்டின் ஏனைய மாகாணங்களிலோ அடிப்படைவாதக் குழுக்களோ குற்றம் புரிவோரோ உருவாகின்றார்களா? என்பது பொது மக்களாகிய நமக்குத் தெரியாது. அரச இயந்திரம்தான் பாதுகாப்புப் படைகளையும் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்தி அதனைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
அந்த வகையில், முன்கூட்டியே அரசாங்கம் இவ்வாறான அறிவிப்பொன்றை வெளியிட்டமை ஒரு வகையில் நல்லது என்றும் கூறலாம். ஏனெனில், முஸ்லிம்கள் இவ்வாறான குழுக்கள் ஏதும் உருவாகின்றதா? என்பது குறித்து அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுவதற்கு இந்த அறிவிப்பு உதவியாக அமையக் கூடும்.
ஆயினும், முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்கள் என்று அரசாங்கம் கூறியுள்ளமை உண்மையிலேயே முஸ்லிம்களை மனக் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்றதைப் போன்ற இன்னுமொரு கசப்பான அனுபவம் தமக்கு ஏற்படப் போகின்றதா? என்ற சந்தேகமும் கணிசமான முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 
முஸ்லிம் எம்.பி. ஒருவர் குறிப்பிட்டிருந்ததைப் போல, எந்தவொரு மதத்திலும் இனத்திலும் அடிப்படைவாதம் அல்லது பயங்கரவாதம், தீவிரவாதம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட விடயம் அல்ல. எல்லா மதங்களும் அதனை ஒரு குற்றமாகவே நோக்குகின்றன. அமைதியையே போதிக்கின்றன. இலங்கையில் முஸ்லிம் மக்களும் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களும் அவ்விதமான ‘வாதங்களுக்கு’ ஒருபோதும் ஆதரவில்லை என்பதை நீண்டகாலமாகக் கூறி வருகின்றனர். 
 
அதனை அரசாங்கமும் அறியும்.  எனவே, முன்னைய அரசாங்கங்களைப் போல, இந்த அரசாங்கமும் ‘முஸ்லிம்’ என்ற அடையாளப்படுத்தலுடன் ஏன் இந்த தகவலை வெளியிடுகின்றது என்ற கேள்வி எழாமல் இல்லை. இலங்கையில் தனியான இன, மத பிரிவினைகள் இருக்கக் கூடாது என்றும், எல்லோரும் இலங்கையர் என்றும் கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்த போது, எல்லாவற்றையும் பொதுப்படையாக நோக்க வேண்டும், இன, மத ரீதியாக பிரித்து நோக்கக் கூடாது என்று என்.பி.பி. கூறியது.
 
அப்படிப்பார்த்தால், ஏன் முஸ்லிம் அடிப்படைவாதம் என்ற சொல் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் தெரியவில்லை. மீண்டும் அடிப்படைவாதம் தோற்றம் பெறுகின்றது என்றோ கிழக்கில் இருந்து அடிப்படைவாத குழுக்கள் தலைதூக்குகின்றன என்றோ நாசுக்காகச் சொல்லியிருக்கலாம்.
அல்லது, முஸ்லிம் என்று நேரடியாகச் சொல்லாமல், வேறு விதமாகக் குறிப்புணர்த்தியிருக்க முடியும். ஆனால், அதனை அரசாங்கம் செய்யத் தவறி விட்டது. அதன் மூலம் அரசாங்கம் எதனை எதிர்பார்த்தது என்பதும் புரியவில்லை.
 
அடிப்படைவாத குழுக்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதும், அது விடயத்தில் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கின்றது என்பதிலும் மறு பேச்சில்லை.ஆனால், ஒரு புலனாய்வுத் தகவலை நாசுக்காகச் சொல்வதற்கு அரசாங்கம் தவறியமை, எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது சுட்டுவிரல் நீட்டுவதற்கான முயற்சியாக அமைந்து விடுமே என்று ஒரு பகுதி முஸ்லிம்கள் அச்சப்படுகின்றனர்.
 
ஏனெனில், முஸ்லிம்களின் கடந்த கால அனுபவங்கள் அப்படிப்பட்டவை. முஸ்லிம்களுக்கு எதிரான இன வாதத்தைச் சூடாக்கியே மஹிந்த ஆட்சி செய்தார். முஸ்லிம்களைப் பயன்படுத்தியே கோட்டாவின் ஆட்சி நிறுவப்பட்டது.
 இந்த வன்முறைகளாலும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ‘சஹ்ரான்’ போன்ற பயங்கரவாதிகள் ஒத்துழைப்பு வழங்கியமையாலும், ஒன்றும் அறியாத அப்பாவி முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சிக்கல்களும் அவமானமும் நெருக்கடிகளும் பாரதூரமானவை.
 
ஆனால், இனவாதத்தை முற்றாக இல்லாதொழித்து, இன நல்லிணக்கத்தைப் பேசியே அதன் மூலமே ஆட்சிக்கு வந்த அரசாங்கம் என்று என்.பிபியை சிறுபான்மை மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை என்னவோ போல் உள்ளது.
நாட்டில் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பெருகியுள்ளன. கொலைச் சூத்திரதாரியான செவ்வந்தியை மட்டுமன்றி, முன்னாள் உயர் பொலிஸ் அதிகாரியையே கைது செய்ய முடியாதுள்ளது.
 
வடக்கு, கிழக்கில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்எம்.பிக்கள்கூறிவருகின்றனர்.உயிர்த்தஞாயிறுதாக்குதல் விவகாரத்திற்கானநீதிக்கோரிக்கைகள்,அழுத்தங்கள்மட்டுமன்றி,பட்டலந்தவதைமுகாம்சர்ச்சைகளும்கிளறப்பட்டுள்ளன.ஞானசார விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரும் தன்பங்கிற்கு சில கதைகளைக் கூறத் தொடங்கியுள்ளார். மிக முக்கியமாக, இதற்கிடையில் உள்ளூராட்சி  சபைத் தேர்தலும் வருகின்றது.எனவே, கிழக்கில் அடிப்படைவாதக் குழுக்கள் உள்ளன என்பது உண்மையாகக் கூட இருக்கலாம். அதனை அரசாங்கம் சரிவர தேடியறிந்த உறுதி செய்ய வேண்டும். 
 
அது வேறு விடயம்.ஆனால், முஸ்லிம் என்ற அடைமொழியுடன் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கும் மேலே கூறப்பட்ட நாட்டு நடப்புக்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா? என்ற ஐயப்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பரவிக்கிடக்கின்றன.கிழக்கில் அல்லது முஸ்லிம்களுக்கு மத்தியில் அடிப்படைவாதகுழுக்கள்இல்லைஎன்றுஇப்பத்தி கூற முற்படவில்லை. நாட்டின் எப்பாகத்திலும் எப்படியான குழுக்களும் உருவாகினாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதுதான் நாம் கண்ட யதார்த்தமாகும்.
 
குறிப்பாக, முஸ்லிம்களுக்குள் இருந்த பிழையாக வழிநடத்தப்பட்ட சஹ்ரான் கும்பல்தான் முஸ்லிம் சமூகம் நினைத்திராத சந்தர்ப்பத்தில் ஒரு பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது என்பதைக் கண்டோம்.
அதன் சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும், இந்த பயங்கரவாதிகள் அதற்குத் துணைபோயிருக்கின்றார்கள் என்பது பட்டவர்த்தனமானது. எனவே, ஆழமாகத் தேடிப் பார்க்காமல், எடுத்த எடுப்பில் முஸ்லிம்களுக்குள் அப்படியான குழுக்கள் எதுவும் இல்லை என்று நாம் கூறி விட முடியாது. அதனை அரசாங்கமே கூற வேண்டும்.
 
சமூக விரோத குழுக்கள் எதுவும் எந்த இனக் குழுமத்திற்குள் இருந்தாலும் அதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டியது அரச இயந்திரத்தின்தலையாயகடமையாகும்.அடிப்படைவாதிகளுக்காகப்பயங்கரவாதிகளுக்காகஎந்த சமூகமும் பரிந்து பேசப் போவதில்லை.ஆனால், முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்கள் என்று கூறியதன் மூலம் ஏனைய இன மக்கள் கிழக்கு முஸ்லிம்களை ஒருவித சந்தேகக் கண்கொண்டு பார்க்கலாம் என்ற உணர்வு உருவாகியுள்ளது. இதனைப் பயன்படுத்தி கடந்த காலத்தைப் போல, நாம் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடுமா? என்ற அச்சமும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
 
எனவே, என்ப.p.பி. அரசாங்கம் இவ்விடயத்தை இன்னும் பக்குவமாக கையாள வேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம்களை மையப்படுத்திய நகர்வுகள் விடயத்தில் முன்னைய ஆட்சியாளர்கள் போல இந்த அரசாங்கமும் செயற்பட்டு விடக் கூடாது.மறுபுறுத்தில், முஸ்லிம்களுக்குள் இப்படியான பிறழ்வான, தீவிரபோக்குள்ள குழுக்கள் உருவாகுமாயின்அதனைகட்டுப்படுத்தமுஸ்லிம்மக்கள்அரசாங்கத்திற்குமுழுஒத்துழைப்புவழங்குவதுடன்,இவ்விகததை மிகவும் புத்திசாலித்தனமாகவும் கவனமாகம் கடந்து செல்ல வேண்டும். 
 
 மொஹமட் பாதுஷா 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X