Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2022 மே 27 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவிடம் கடன் வாங்கிய நாடுகளில் உருப்படியாக முன்னேற்றம் அடைந்த வரலாறுகள் குறைவென பலரும் தகவல்களை தெரிவிக்க தொடங்கிவிட்டனர். அந்தளவுக்கு கடுமையான இறுக்கத்துடன் அந்நாடு, தனது கொள்ளையில் இருக்குமாம்.
கடந்த அரசாங்கத்தின் போது, சீனாவிடமிருந்து பெரும் தொகை கடன்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எந்தவோர் அபிவிருந்தியாக இருந்தாலென்ன, சீனாவின் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட விளம்பர பலகைகளே காட்சியளித்தன.
ஏன்? இலங்கையின் கொலனியாக சீனா மாறுமென ஆரூடம் கூறப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி, இலங்கையின் அரச கரும மொழிகளில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்தஸ்து பெயர், விளம்பர பலகைகளில் இல்லாமற் செய்யப்பட்டு, சீன மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த கசப்பான சம்பவங்கள்ளும் உள்ளன.
எனினும், மொழி உரிமைகளுக்காக குரல் கொடுத்தமையால், அது காப்பாற்றப்பட்டது. மீளவும் தமிழ்மொழி பொறிக்கப்பட்டது. இந்நிலையில், பெற்றக் கடனை திருப்பிச் செல்லுத்துவதற்காக சீனாவிடமே கடன்வாங்க வேண்டிய நிலைமையொன்றே கடந்த அரசாங்கத்தின் போது ஏற்பட்டிருந்தது.
நெருக்கடியான நிலையில் இலங்கை இருந்தாலும், கிடுகு பிடியிலேயே சீனா இருந்தது. கடனை வட்டியுடன் செலுத்தவேண்டும். அதற்காக கடன் தரும் போக்கையே சீனா கொண்டிருந்தது. ஊர் மொழிகளில் சொல்வதாயின், “வட்டி குட்டி போடும்” என்பதாகும்.
இலங்கை மக்கள் தங்களது சுதந்திர வரலாற்றில் மிகவும் சவாலான காலகட்டத்தை கடக்கின்றனர். அந்தவகையில் தொடர்ச்சியான குடும்ப ஆதிக்க அரசாங்கங்கள், நாட்டின் பிரதான உணவு மற்றும் இறக்குமதிக்கும் சுமையின் ஒரு நெருக்கடி தருணத்திற்கும் அவர்களை அழைத்துச் சென்றுள்ளன.
கொடுப்பனவு சமநிலை நெருக்கடி பேரழிவுகரமான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய உணவு வகைகள் மற்றும் எரிபொருள் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய முடியாத நெருக்கடி சாமானியர் மீது முற்றிலும் விழுந்துள்ளது. இதன்விளைவாகஇ அவர்கள் கடுமையான பற்றாக்குறைஇ செங்குத்தாக அதிகரித்து வரும் விலைகள் மற்றும் அரைநாளுக்கு மேல் நீடிக்கும் தினசரி மின்வெட்டு ஆகியவற்றுடன் தீவிரமாக போராடுவதற்கு விடப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விரிவடைந்து வரும் பேரழிவின் தீவிரத்தைஇ அதன் பின்னணியில் பல மனித துன்பங்களையும் இ சமூக முரண்பாடுகளையும் ஒதுக்கி விட்டு இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநரான நந்தலால் வீரசிங்கவினால் மே 11 அன்று வரையப்பட்ட யதார்த்த சூழ்நிலை பற்றிய விவரிப்பிலிருந்து அளவிட முடியும்.
இலங்கையின் பொருளாதாரம்இ அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க விரைந்து புதிய அரசாங்கம் நியமிக்கப்படாவிட்டால் மீட்கவே முடியாத அளவுக்கு சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அன்று அவர் எச்சரிக்கும் நிலைமை இருந்தது.
4000 டொலர்களுக்கு மேல் ஆரோக்கியமான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் தெற்காசியாவிலேயே மிகவும் முன்னேறிய பொருளாதாரம் என்று சம{ப காலம் வரை கூறி வந்த ஒரு நாடுஇ மிக வேகமாக இந்த நிலைக்கு வரலாம் என்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கையிடமிருந்து தேவையான படிப்பினைகளைப் பெறுவதற்கும்இ அவற்றுக்கு செவிசாய்ப்பதற்கும் தங்கள் சொந்த அரசாங்கங்களை அழைக்குமாறு பிராந்தியத்தின் பிற பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் உள்ள நிபுணர்களை இந்த நிலைமை தூண்டியுள்ளது.
இலங்கை மீதான நுகுளுயுளு இன் கடைசி விவரிப்புக்குப் பின்னர்இ நாடு தழுவிய அமைதியான போராட்டங்கள் அதிகரித்துஇ ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சிக்கு எதிரான வன்முறைச் சூழலில் நாடு காணப்படுகின்றது. புpரதமர் மகிந்த ராஜபக்ஷ ராஜினாமாச் செய்ய நிர்பந்திக்கப்பட்டமையால்இ அவர் கிழக்கு கடற்கரையில் திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தின் பாதுகாப்பிற்கு பாதுகாப்புப் படையினரால் வெளியேற்றப்;பட்டார். இதனால் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால்இ அது எட்டு பேர் கொல்லப்படுவதையும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைவதையும் தடுக்கவில்லை. புல வாரங்களாக நடந்த ஆர்ப்பாட்டங்கள்இ மே 9 அன்று மகிந்த ராஜினாமா செய்ததில் இருந்து அரசாங்கத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுக்களிடையே இரத்தக்களரி மோதல்களாக சிதைந்தன. தொடர்ந்து ராஜபக்ஷ குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் பல அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகள் கிளர்ச்சியடைந்த போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
நிலைமை மிகவும் பதற்றமாக இருந்ததைத் தொடர்ந்துஇ இராணுவ வீரர்கள் கவச வாகனங்களில் தெருக்களில் ரோந்து சுற்றினர். வன்முறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வன்முறையாளர்களைக் கண்ட இடத்தில் சுடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டது.
ஆபத்தான முறையில் கையை விட்டு நழுவும் நிலைக்கு அருகில் இருந்த நிலைமையை மீளக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தின் அழுத்தம்இ மகிந்தவின் இளைய சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் செயல்படத் தூண்டியது.
கோட்டாபய தனது பெரும்பாலான நிறைவேற்று அதிகாரங்களை விட்டுக் கொடுத்து விரைவில் ஒரு புதிய அமைச்சரவையை அமைப்பதாக மே 9 இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், உறுதியளித்ததன் மூலம் நாடு தழுவிய பல வாரங்களாக நடந்த போராட்டங்களுக்கு அடிபணிந்தார்.
எவ்வாறாயினும்,அவர் பதவி விலக வேண்டும் என்று வளர்ந்து வரும் கோரிக்கையை ஏற்காமல் நிறுத்திக் கொண்டார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பெறும் பிரதமரை நான் அறிவிப்பேன் என அவர் அறிவித்தார். நாட்டின் தலைமையைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை பொருளாதார மீட்சிக்கான சாத்தியக்கூறுகளை மழுங்கடிப்பதாக ஆய்வாளர்கள் நீண்ட காலமாக அடிக்கோடிட்டுக் கொண்டிருந்தனர்.
கொழும்பில் உள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து கூறுகையில், எதுவும் நடப்பதற்கு முன்னர் அரசியல் சூழ்நிலைக்குத்; தீர்வு காணப்பட வேண்டும். உங்களுக்கு நம்பகமான அரசாங்கம் தேவை. தற்போது ஜனாதிபதி பதவி என்பது விஷம் கலந்த பானம் போன்றதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப்பின்னணியில்இ பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து மூடிய கதவு விவாதங்களுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் 26 ஆவது பிரதமராக மே 10 அன்று கோட்டாபயவினால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். அவரது நியமனத்திற்குப் பிறகு, 73 வயதான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், தேசிய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்து, தீவு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாக உறுதியளித்தார்.
மிகவும் நிம்மதியடைந்த கோட்டாபய, அவர் மற்றும் விக்கிரமசிங்கவின் படத்துடன் டுவீட் செய்துள்ளார். மிகவும் கொந்தளிப்பான நேரத்தில் நமது நாட்டை வழிநடத்தும் சவாலான பணி;யை மேற்கொள்ள முன்வந்த இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். இலங்கையை மீண்டும் வலிமையாக்க அவருடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என்றார் கோட்டாபய. மஹிந்தவும் விக்கிரமசிங்கவை விரைவாக வாழ்த்தினார். அவர் வழிசெலுத்தும்போது அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்று கூறினார். இந்த சிக்கலான காலங்கள் என்பதையும் நினைவூட்டினார்.
மகிந்தவும் குறிப்பிட்ட இக்கட்டான காலங்கள் பல காரணங்களால் பல வருடங்களாக உருவாகிக் கொண்டிருந்தாலும் இ அதன் வருகையில் ராஜபக்ஷக்கள் ஆற்றிய பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது.
வொஷpங்டன் போஸ்ட் மே 11 கட்டுரையில் சுட்டிக் காட்டியபடி,இ பாதுகாப்புப் படைகள் மீது கட்டுப்பாட்டை செலுத்துவது முதல் பொருளாதாரத்தின் முக்கி;ய துறைகளில் செல்வாக்கு செலுத்துவது வரையிலான பல்வேறு அரச எந்திரங்களில் ராஜபக்ஷ குலத்தின் கைகள் இருந்தன. இதில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய பரவலான மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இலங்கை இராணுவத்தின் 2009 உடன் வந்தன. தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்இ போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமைஇ ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களுக்கு எதிரான பல ஆண்டுகளாக வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்கள் மற்றும் நாட்டின் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்திய தீவிரவாத போர்க்குணமிக்க பௌத்த துறவிகளின் கட்டளைகளை மறைமுகமாக வளர்ப்பது உட்பட இன-மத பதற்றங்களை தூண்டுதல் போன்றவையும் இதில் உள்ளடக்கம். அதன் பிறகு பொருளாதாரத்தில் அவர்களின் தவறான நிர்வாகம் இருந்தது. ராஜபக்ஷக்கள் அமைதிக் காலத்திலும் இராணுவத்திற்கான நிதியுதவியை விரிவுபடுத்தினர் மற்றும் குடும்பத்தின் செல்வத்தை வளப்படுத்தக்கூடிய குட்டி முதலாளித்துவத்தின் வடிவத்தில் ஈடுபட்டனர். அவர்களது குடும்பத்தின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் உள்ள துறைமுகம் உட்பட – சீனாவின் நிதியுதவியுடன் கூடிய முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை அவரகள் விளம்பரப்படுத்தினர்.
புதிய பிரதம மந்திரி விக்கிரமசிங்க இந்தப் பொருளாதார முறைகேடு மற்றும் ஊழலை மாற்றியமைத்து மக்கள் ஆதரவை பெறுவதற்கான பணியை இப்போது எதிர்கொள்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago
24 Nov 2024