Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
'என் கடன் பணி செய்து கிடப்பதே' - திருநாவுக்கரசர்
இந்த உலகத்தில், இதுவரை எத்தனை அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள் வந்திருந்தாலும், தொலைக்காட்சிக்கு இருக்கக்கூடிய மதிப்பும் சிறப்பும் சற்றேனும் குறையவில்லை என்றே கூற வேண்டும். சிறியோர் முதல் பெரியோர் வரை வயது வேறுபாடின்றி அனைவரும் கண்டுகளிக்கக்கூடிய ஒரு சிறப்பான பொழுது போக்கு அம்சம் என்றால் அந்த பெருமை தொலைக்காட்சியையே சேரும். அதிலும், வசந்தம் தொலைக்காட்சி தமிழ் பேசும் மக்களின் அபிமானம் வென்று வீறுநடை போடும் அலைவரிசையாகும்.
ஏனென்றால், இலங்கையில் எத்தனையோ தமிழ்த் தொலைக்காட்சிகள் இருக்கின்ற போதிலும் கூட, வசந்தம் தொலைக்காட்சியினுடைய நிகழ்ச்சிகளும் அதனுடைய படைப்புகளும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்பிப்பார்க்கப்படுகின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக அமைந்திருக்கின்றன.
குறிப்பாக, நாம் இதுவரை காலமும் தென்னிந்தியா அல்லது ஏனைய உலக நாடுகளுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தே பிரமித்துப் போயிருந்தோம். அவர்களுடைய நிகழ்ச்சி தயாரிப்பு முறைகள், அந்நாடுகளின் கலைஞர்களின் திறமைகள் ஆகியவற்றை கண்டு வியந்திருந்தோம்.
ஆனால் எங்களுடைய நாட்டில் இருக்கக்கூடிய கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமல்லாமல் இலங்கையர்க்கே உரித்தான குறிப்பாக 100% Srilanka என சொல்வதற்கு ஏதுவாக முற்று முழுதாக இலங்கையர்களுக்கு அதிகமான வாய்ப்புக்களை கொடுப்பதுடன் முழுமையான இலங்கை தயாரிப்புக்களால் உருவான நிகழ்ச்சிகளையே வசந்தம் தொலைக்காட்சி இன்றுவரை ஒளிபரப்பி வருகிறது.
குறிப்பாக தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் நாடகங்களைத் தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் இலங்கை கலைஞர்களையும் ஊழியர்களையும் கொண்டு உருவாகும் தயாரிப்பு நிகழ்ச்சியாகவே அமைந்திருக்கின்றன.
அதுமட்டுமன்றி ஏனைய தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பிரதி செய்து ஒளிபரப்பாமல் எங்கள் மண்ணின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சிகளைப்படைப்பது தான் வசந்தம் தொலைக்காட்சியினுடைய சிறப்பாக அமைந்திருக்கிறது.
அத்தகைய ஒரு நிகழ்ச்சியாக, காலை வேளையில் ஒளிபரப்பாகும் 4 சமயங்களையும் உள்ளடக்கிய 'ஆராதனை' நிகழ்ச்சி அனைத்து சமயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து வரக்கூடிய பத்திரிகைக் கண்ணோட்டம், 'சுயாதீன செய்திப் பார்வை' நிகழ்ச்சியானது இலங்கையிலிருந்து வெளியாகக் கூடிய அநேக பத்திரிகைகளின் செய்திகளையும் ஒருமித்து தொகுத்து வழங்கக் கூடிய நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
வசந்தம் தொலைக்காட்சியின் படைப்புகளில் எமது படைப்பு என மார்தட்டி சொல்லக்கூடிய மற்றொரு படைப்பு காலை வேளையில் ஒளிபரப்பாகும் ஆயிரக்கணக்கான மக்களின் அபிமானத்தை வென்ற 'தலைவாசல்' நிகழ்ச்சியாகும். துறைசார்ந்த அதிதிகளை அழைத்து அவர்களுடன் உரையாடுவது, கால சூழலுக்கு ஏற்றதான தலைப்புகளை உரையாடி மக்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது என 9 மணிவரை இடம்பெறும் தலைவாசல் நிகழ்ச்சி எமக்கான சான்று என்றே கூறலாம்.
அதனைத் தொடர்ந்து ஒளிபரப்பாகும் 'நினைத்தாலே இனிக்கும்' நிகழ்ச்சி. பழைய பாடல்களை விரும்பிக் கேட்கக்கூடிய பார்வையாளர்களுக்கு அந்த நிகழ்ச்சியின் பெயரை கேட்டாலே இனிக்கும் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல 'தேன் சிந்தும் ராகங்கள்', 'சந்ரோதயம்' என்பவை பழைய பாடல்களோடு நடுத்தர வயது இரசிகர்களின் மனங்கர்ந்த நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பாவன. அதுமட்டுமன்றி, புத்தம்புதிய பாடல்களோடும் சமூகவலைத்தளங்களோடு இணைந்து இளைஞர்கள் மனதை கொள்ளை கொள்ளும் நிகழ்ச்சிகளாக 'ஹலோவசந்தம்', 'மியூசிக் எஸ்பிரஸ்', 'சண்டே கபே', 'ட்ரெண்ட விடுங்க' என பலதரப்பட்ட படைப்புகளுக்கும் பஞ்சமில்லை வசந்தம் தொலைக்காட்சியில்.
சமூக பொறுப்புள்ள ஊடகம் என்ற கண்ணியத்தை சம்பாதித்த வசந்தம் தொலைக்காட்சி மாணவர்களுக்காகவும், தேடல் மீது ஆர்வம் கொண்டவர்களுக்காகவும், அறிவியல் நிகழ்ச்சிகளையும் வழங்குவதில் பின் நிற்கவில்லை. 'சுற்றிவரும் பூமி', 'தொடுவானம்' ஆகிய நிகழ்ச்சிகள் அதற்குச் சான்று. உள்நாட்டு கலைஞர்களை ஊக்குவிக்கும் எமது படைப்புகளாக 'நம்ம ஹிட்ஸ்', 'தூவானம்' போன்ற விளங்குகின்றன.
இலங்கையின் பாரம்பரியத்தையும், கலைகளையும் போற்றும் வசந்தம் தொலைக்காட்சி நாடக கலைஞர்களின் திறமைகளுக்கு களமாக 'வாங்க பழகலாம்' நிகழ்ச்சியும், இசை கலைஞர்களுக்கு ஒரு மேடையாக 'மியூசிக் ஸ்ரூடியோ' நிகழ்ச்சியும் இலங்கையும் பெருமைப்படதக்க படைப்புகளாக வழங்கிவருகின்றது.
இதேபோல திரைப்படங்களை ஒளிபரப்புவதோடு மாத்திரம் நின்றுவிடாது உலக சினிமாவை பேச 'ஒஸ்கார்', புதிய திரைப்படங்களுக்கு விமர்சனம் கூற 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்', இடைக்கால திரைப்படங்கள், குறுந்திரைப்படங்கள், நம் நாட்டுப் படைப்புகள் பற்றி பேச 'றீல்பெட்டி' என வகை வகையாக நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளது.
அதேவேளை, அரசியல் விவாதங்களுக்கு நிகழ்ச்சியாக 'தீர்வு' மக்களின் அரசியல் சார்ந்த கேள்விகளோடு வெற்றிகொடி நாட்டிய நிகழ்ச்சியாக செல்கின்றது.
நிகழ்ச்சிகள் படைப்புகள் இவ்வாறு இருக்க அங்கு பணியாற்றக்கூடிய இளைஞர் பட்டாளம் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். வசந்தத்தின் ஊழியர்களும் தங்களுடைய அயராத உழைப்பு, கடும் முயற்சியின் காரணமாக சிறந்த நிகழ்ச்சிகளை இலங்கையர்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை மக்கள் அனைவரும் தேடிக் கட்டாயம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சிகளை தரமான வகையில் தெளிவாகக் தருவது தான் வசந்தம் தொலைக்காட்சியின் 11 ஆண்டு வெற்றியின் இரகசியம்.
எனவே, மேன்மேலும் வசந்தம் தொலைக்காட்சியானது பல தரமான சிறப்பான புத்தம் புதிய நிகழ்ச்சிகளை வழங்கி குறிப்பாக ஒட்டுமொத்த உலக தமிழ் இரசிகர்களையும் தன் வசம் ஈர்க்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அதிலும் வசந்தம் தொலைக்காட்சியின் சிறப்பு யாதெனில் வார மற்றும் வார இறுதி நிகழ்ச்சிகளை வெவ்வேறாகப் பிரித்து வழங்குவதால் வசந்தம் தொலைக்காட்சி ஏனைய தொலைக்காட்சிகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக பரிணமிக்கின்றது.
எனவே, எதிர்வரும் காலங்களில் இந்த வசந்தம் தொலைக்காட்சியானது, பல்வேறு சாதனைகளை புரிந்து அதன் பெருமையை இலங்கை மக்களுக்கு வழங்குவது மாத்திரமல்லாமல் நிகழ்ச்சிகளில் ஒரு போக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன் இலங்கை மக்களுடைய கலை, கலாசார, பொருளாதார விழுமியங்களில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தும் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை. வாழ்க வசந்தம் தொலைக்காட்சியின் ஊடக்கபணி, வளர்க மென்மேலும் வெற்றிகளுடன்.
ஆக்கம்:- தினேஸ் சுந்தர்
புகைப்படம்:- கோணேஸ்வராசா
அலைவரிசைப் பிரதானி:- வசந்தம் TV
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
2 hours ago