2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

பரிஸ் ஒலிம்பிக் வில்வித்தையில் உலக சாதனை படைத்த கொரிய வீராங்கனை

Freelancer   / 2024 ஜூலை 26 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸின் பரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று நேற்று (25) நடைபெற்றது. இதில் தென் கொரிய வீராங்கனை லிம் சி-ஹியோன், தனிநபர் ரேங்கிங் சுற்றில் உலக சாதனை படைத்துள்ளார்.

மகளிர் தனிநபர் பிரிவில் பங்கேற்ற லிம், 720 புள்ளிகளுக்கு 694 புள்ளிகளைப் பெற்று முதல் இடம் பிடித்தார். இதன் மூலம் முந்தைய உலக சாதனை மற்றும் ஒலிம்பிக் சாதனையை அவர் தகர்த்தார்.

இதற்கு முன்னர் 72 முறை அம்புகளை எய்தும் ரேங்கிங் சுற்றில் தென் கொரியாவின் அன் சான் 692 புள்ளிகளை எடுத்தது உலக சாதனையாக இருந்தது.

அதனை 2019 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் அவர் படைத்திருந்தார். தற்போது அதை லிம் முந்தியுள்ள நிலையில், இந்த முறை பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீராங்கனைகளில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X