2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிதாக தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு படகு (LIFEBOAT) ஒன்று 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

LIFEBOAT
என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இப்படகானது 70  இருக்கைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் பீப்பாய்கள் மற்றும் கடல்சார் கட்டிடங்களில் தொழில்புரிபவர்கள் அவசர நிலைமைகளின்போது இப்படகின் மூலம் உயிர்தப்பும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படகின் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப பரிசோதனை நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது. இவ்வாறான படகை உலகளாவிய ரீதியில் பயன்படுத்தும் செயற்திட்டம் வெகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக படகை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த படகானது 154 அடி உயரத்திலிருந்து விழும் வகையிலே தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதற் பரிசோதனையின்போது அதிகூடிய உயரத்திலிருந்து வீழ்ந்துள்ளது.

ஒவ்வொரு இருக்கைகளுக்கும் 220 இறாத்தல் மணல் பைகள் வைக்கப்பட்ட நிலையில் இப்படகின் முதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரீட்சார்;த்த முயற்சியானது நோர்வேயின் எரென்டல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு படகை தயாரிக்கும் நோர்சேப் நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் இதன்வெற்றிக் குறித்து பெருமிதம் அடைந்துள்ளனர்.

இவ்வாறான படகினை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் அவுஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.


You May Also Like

  Comments - 0

  • Yaseenbawa Hussain Wednesday, 02 January 2013 03:51 PM

    அதுவும் மனிதனுக்கு நல்லதுதான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X