2024 டிசெம்பர் 30, திங்கட்கிழமை

87 மணிநேரம் தூங்காமல் இருந்து டி.வி. பார்த்து மூவர் சாதனை

Kogilavani   / 2014 ஜனவரி 23 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவைச் சேர்ந்த மூவர் தொடர்ந்து 87 மத்தியாலங்கள் தூங்காமல் இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

டான் ஜோர்டன், ஸ்பென்சர் லார்சன், கிரிஸ் லாப்லின் என்ற மூன்று பேரே இந்த கின்னஸ் சாதனையை அமெரிக்க நெவாடாவின் லாஸ்வேகாஸ் மாநாட்டு மையத்தில் வைத்து நிலைநாட்டியுள்ளனர்.

கின்னஸ் விதிகளின்படி அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் என ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்கள் அந்த நேரத்தை மலசலக்கூடம் செல்வதற்காக மட்டும்  பயன்படுத்திகொண்டனர்.

இதனைவிட உணவை உட்கொள்ளவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கின்றபோது செனல்களை மாற்றிக்கொள்ளவும், சாப்பிட மற்றும் குளிர்பானங்கள் அருந்த மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் நித்திரைகொள்ளவோ வேறு ஏதனையும் படிக்கவோ தங்களுக்குள் பேசிக் கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை.

போட்டியாளர்கள் மூவரும் தொலைக்காட்சி பார்க்கும் நிகழ்வு நேரடி நிகழ்ச்சியக ஒளிபரப்பப்பட்டது. இதனால், மக்கள் அவர்களைக் கண்காணித்தனர். அவ்வப்போது அவர்களது உடல்நிலையும் மருத்துவர்களால் சோதிக்கப்பட்டது.

போட்டியில் கலந்து கொண்ட மூவரும்; தொடர்ந்து 5 நாட்களில் 87 மணி நேரம் தூங்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துள்ளனர்
அதனைத் தொடர்ந்து முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டதாகக் கூறி, இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர், அமெரிக்காவை சேர்ந்த கேரின் ஷ்ரீவ்ஸ் மற்றும் ஜெரேமியா பிராங்கோ என்ற இருவர் தொடர்ந்து 86 மணிநேரம் 37 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்த்த கின்னஸ் சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X