2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

51 வைன் குவளைகளை கைகளில் ஏந்தி சாதனை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே தடவையில் 51 வைன் குவளைகளை கைகளில் ஏந்தி நபர் ஒருவர் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

சீனாவின் பீஜிங்கை தலைமையாக கொண்ட பிலிப் ஒசென்டன் என்ற 43 வயதுடைய நபரே இச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இவர், ஏற்கனவே 39 குவளைகளை ஏந்தி நிலைநாட்டப்பட்டிருந்த சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர், வைன் பரிசாரகராக தொழில்புரியும் போது ஒரே தடவையில் ஒரு தொகை கண்ணாடி குவளைகளை கைகளில் ஏந்தும் செயற்பாடை பழகியுள்ளார்.

ரிட்ஸ் ஹோட்டலில் வைன் பரிசாரகராக தொழில்புரிந்த போது நான் இதனை பழகிக் கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

குறுகிய நேரத்தில் 280 குவளைகளை ஒரே தடவையில் ஏந்துவது எனக்கு இயல்பானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X