2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

45,000 மாணவர்களை உள்வாங்கி கின்னஸ் சாதனை படைத்த ஆரம்பப் பாடசாலை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் இலங்கை பெற்றோர் பெறும் சிரமங்களை எதிர்கொள்கின்ற நிலையில் இந்தியாவில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்று 45,000 மாணவர்களை உள்வாங்கி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.

இதேவேளை, இப்பாடசாலையில் 2500 ஆசிரியர்கள் கடமையாற்றுவதுடன் 1,000 வகுப்பறைகள் இம்மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் லக்னோவ் பகுதியில் நகர் புறத்தில் இயங்கிவரும் பாடசாலையொன்றிலே இவ்வாறு 45,0000 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இப்பாடசலையில் கடந்த 2010 – 2011 வரை 39,437 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே இத்தொகை 45,000 ஆக அதிகரித்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேற்படி பாடசாலையை 1959 ஆம் ஆண்டு ஜகதிஸ் காந்தி மற்றும் அவரது மனைவி பாரதி என்ற தம்பதியினர் 300 ரூபாய் வங்கி கடனினூடாக ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இப்பாடசாலை 5 மாணவர்களை மட்டுமே கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது இப்பாடசாலையின் கிளைகள் 20 நகரங்களில் காணப்படுவதுடன் 3 வயதிலிருந்து 17 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கையை வழங்கி வருகின்றது.

'இப்பாடசாலையின் குறிப்பிடத்தக்க இந்த வளர்ச்சியானது பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்று நினைத்ததின் பிரதிபலிப்பே' என இப்பாடசலையின் நிறுவுனர் காந்தி (வயது 75) தெரிவித்துள்ளார்.

'எமது மாணவர்கள் ஒவ்வொரு  வருடமும் சிறந்த பெருபேறுகளை பெறுகின்றனர். இந்த சாதனையானது எமது வளர்ச்சிக்கு உற்சாகமூட்டுகின்றது. இதை அளவிட முடியாது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X