2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

2,100 ஊசிகளை தலையில் பதித்து இலங்கையர் சாதனை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


கனடாவில் வசித்து வரும் இலங்கை பிரஜையான மோஹனதாஸ் சிவநாயகம் என்பவர் தனது தலையில் 2,100 ஊசிகளை பதித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் ஏற்கனவே அதிகமான ஊசிகளை தலையில் பதித்து கின்னஸ் சாதனையை நிலைநாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் (வயது 37) தனது 23 ஆவது வயதில் கனடாவிற்கு சென்றுள்ளார்.

கடந்த 2009 ஆண்டு 2,009 ஊசிகளை தலையில் பதித்து சாதனைப் படைத்திருந்த சீனாவைச் சேர்ந்த வெய் சேங்குவின் சாதனைகளை இவர், 2025 ஊசிகளை பதித்து கடந்த 2011 ஆம் ஆண்டு முறியடித்திருந்தமை குறிப்படத்தக்கது.

இவரது 2011 ஆம் ஆண்டுக்கான சாதனை சான்றிதழானது கடந்த வாரமே கிடைக்கபெற்ற நிலையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக தனது புதிய சாதனையை இவர் நிலைநாட்ட எண்ணியுள்ளார்.

தலையில் ஊசி பதியும் செயற்பாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊசிகளும் 1.5 சென்றிமீற்றர் ஆழத்தில் பதியப்பட்டுள்ளது.

தற்போது அவர் 12,000 அமெரிக்க டொலர்களை திரட்டியுள்ளதுடன் அதனை நிதிநிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X