Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 05, புதன்கிழமை
Kogilavani / 2015 மார்ச் 04 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாற்றான் படத்தில் வரும் இரட்டை சூர்யாக்களை முதல்முறை நாம் பார்க்கும் போது, இது எல்லாம் திரைப்படத்துக்கு மாத்திரமே சரிவரும். உண்மையான வாழ்க்கையில் இப்படி யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்திருப்போம். ஆனால், அதேபோன்று வயிறு, நெஞ்சுப்பகுதி ஒட்டிய குழந்தைகள் தற்போது அதிகமாகவே பிறக்கின்றன.
சவூதி அரேபியாவிலும் இவ்வாறான குழந்தைகள் பிறந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியாவின் யேமான் குடியரசில் அப்துல்லாஹ் மற்றும் அப்துல் றஹ்மான் ஆகிய இரண்டு குழந்தைகளும் இடுப்பு பகுதி மாத்திரம் ஒட்டியவாறு பிறந்துள்ளன.
எனினும், சவூதி அரேபியாவின் தலைநகரில் அமைந்துள்ள மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தைகள், சுமார் 9 மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சைக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, இரு குழந்தைகளும் குடல் மற்றும் மேலும் சில உடல் உறுப்புக்களை பகிர்ந்தே பிறந்துள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் பின்னர் 9 கட்டங்களாக பிரிக்கப்பட்ட சத்திர சிகிச்சை, சுமார் 9 மணிநேரம் நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் வேறு வேறாக பிரிக்கப்பட்டதன் பின்னர், சத்திர சிகிச்சையில் ஈடுபட்டிருந்த வைத்தியர் குழு, இருவேறு குழுக்களாகப் பிரிந்து இரண்டு குழந்தைகளுக்குமான சில சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தைகளின் சிறுநீரக உறுப்பு, குடல் மற்றும் இடுப்பு எழும்பு ஆகியவையே சத்திர சிகிச்சையின் மூலம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த குழந்தைகளை வெவ்வேறாக பிரித்த வைத்தியர் குழு, கடந்த 30 வருட காலத்தில் 30 இரட்டை குழந்தைகளை பிரித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ayman methal Friday, 06 March 2015 06:10 AM
Alhamdulillah.
Reply : 0 0
Deepakumar Friday, 06 March 2015 03:01 PM
God is dector
Reply : 0 0
josuwa Monday, 06 April 2015 04:23 AM
God is greate
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago