2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

சிவமணியின் சாதனை

Kogilavani   / 2014 மே 05 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆயிரம் ட்ரம்ஸ் வாத்தியக் கலைஞர்களுடன் ட்ரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஆனந்தன் சிவமணி.
 
மேடைக் கச்சேரி மட்டுமல்ல, ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் ட்ரம்ஸ் வாசித்தவர் சிவமணி. இப்போது அரிமா நம்பி என்ற திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
 
இந்நிலையில், கின்னஸ் சாதனைக்காக சென்னை வை.எம்.சி.ஏ மைதானத்தில் 1000 ட்ரம்ஸ் வாத்தியக் கலைஞர்களுடன் இடைவிடாமல் 11 நிமிடம் ட்ரம்ஸ் வாசித்து சாதனை படைத்துள்ளார் சிவமணி.

இந்த சாதனை நிகழ்ச்சியினை பாரத் புக் ஒப் ரெக்கோர்ட் புத்தகத்தில் பதிவதற்காக, இந்திய நீதிபதிகள் சங்கத்தின் தலைவரும் முதன்மை சிறப்பு நீதிபதியுமான வி.ராமமூர்த்தி பார்த்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இசையமைப்பாளர் சபேஷ் முரளி, கடம் வித்வான் விநாயக் ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .