2024 டிசெம்பர் 30, திங்கட்கிழமை

பலூன்களினாலான பாரிய டிரான்ஸ்போமர்ஸ் கதாப்பாத்திரம்

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


நியூயோர்கின் கலைஞரும் வித்தைக்காரருமான ஜோன் ரெய்ட் என்பவர் 42 மணிநேரங்களில் பலூன்களினாலான பாரிய டிரான்ஸ்போமர்ஸ் கதாப்பத்திரம் ஒன்றினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

உட்டா பிரதேசத்தில் உள்ள சால்ட் லேக் கொமிக கோன் எனும் இடத்திலேயே இவ் உருவம் வடிவமைக்கப்பட்டள்ளது.

குறித்த உருவமானது 4,302 பலூன்களை பயன்படுத்தி 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு தனிமனிதனால் இவ்வாறான மாபெரும் உருவம் உருவாக்கப்பட்டது இதுவே முதல் தடவை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

இது பற்றி ஜோன் ரெய்ட் தெரிவிக்கையில்,

'எப்படியாயினும் இன்னும் சில மாதங்களில் யாராவது எனது இந்த சாதனையை தோற்கடிப்பார் என்று நம்புகின்றேன். என்னை விட ஒரு பெரிய கலைஞர் கட்டாயமாக இருப்பார்' என்று தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X