2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

உலகிலே அதிக காரமான மிளகாய்

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்காவில் விவசாயி ஒருவரால் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாயானது உலகிலே அதிக காரத்தன்மை உடைய மிளகாய் என்ற கின்னஸ் சாதனையை நிலைநாட்டியுள்ளது.

இந்த மிளகாயின் காரத்தின் அளவு 15 லட்சத்து 69 ஆயிரத்து 300 யூனிட் என அறியப்பட்டுள்ளது.

அமெரிக்கரான எட்குரிய் என்ற விவசாயி வளர்த்த வந்த மிளகாயே இவ்வாறு உலகிலேயே மிகக் காரமான மிளகாய் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளது.

இந்த மிளகாய் பற்றிய ஆய்வுகள் கடந்த நான்கு ஆண்டுகளாக வின்த்ரோப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

ஆய்வின் முடிவில் இது உலகிலேயே மிகக் காரமான மிளகாய் என ஆய்வாளர்களால் அறியப்பட்டுள்ளது.

'நிலநடுக்கத்தை ரிச்டர் அளவு என குறிப்பிடுவது போல, காரத்தன்மையை  ஸ்கோவிலி' என அளவிடுகிறோம்.  நாம் உணவிற்கு பயன்படுத்தும் மிளகாய் 5 ஆயிரம் ஸ்கோவிலி யூனிட் ஆகும்.

ஆனால் சாதனை படைத்த இந்த மிளகாயின் காரத்தின் அளவு 15 லட்சத்து 69 ஆயிரத்து 300 யூனிட்' என மேற்படி மிளகாயை ஆய்வுக்குட்படுத்திய ஆய்வாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நூறு ஆண்டுக்கு  முன்பு காரத்தை அளவிடும் கருவியான ஸ்கோவிலி யூனிட்டை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .