2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நீச்சலுடை அணிவகுப்பில் உலக சாதனை முறியடிப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் இணைந்து நீச்சலுடை அணிவகுப்பில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

சீனாவின் லயாவோனிங் மாகாணத்தின் ஹுலுடோ நகரில் இடம்பெற்ற இந்த நீச்சலுடை அணிவகுப்பில் 4 வயதுக்கும் 70 வயதிற்கும் இடைப்பட்ட 1,085 பெண்கள் பங்குபற்றினர்.

இவ் அணிவகுப்பில் சிலர் சக்கர பாதணிகளுடன் பங்குபற்றினர். சில இளம் பெண்கள் பெல்லி டான்ஸ் ஆடிய வண்ணம் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

இந்த அணிவகுப்பினை பார்வையிடுவதற்காக வந்த கின்னஸ் உலக சாதனையை பரிந்துரைக்கும் குழுவானது இந்த அணிவகுப்பு மிக நீளமான நீச்சலுடை அணிவகுப்பென பரிந்துரை செய்து சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பனாமா நகரில் கடந்த மார்ச் மாதம் 450 பெண்கள் இணைந்து மேற்கொண்ட நீச்சலுடை  அணிவகுப்பே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை  நடைபெற்ற நீச்சலுடை அணிவகுப்பு  முறியடித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X