2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நயாக்கரா நீர்வீழ்ச்சியை கம்பிமூலம் கடந்து அமெரிக்க இளைஞன் சாதனை

A.P.Mathan   / 2012 ஜூன் 17 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமெரிக்க – கனடா எல்லையில் அமைந்திருக்கின்ற உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாக்கரா நீர்வீழ்ச்சியை அமெரிக்க இளைஞன் ஒருவன் கம்பிமூலம் கடந்து சாதனை படைத்துள்ளான்.

கடந்த வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் இச்சாதனையை அந்த இளைஞன் நிகழ்த்திக் காட்டினான். 33 வயதுடைய அமெரிக்காவைச் சேர்ந்த நிக் வலென்டா என்ற இளைஞனே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளான்.

167 அடி உயரமான (51 மீற்றர்) இந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் 190 அடி உயரத்தில் இரு மருங்கிலும் - அதாவது கனடாவின் ஒரு பகுதியிலிருந்து அமெரிக்காவின் மறுபகுதியிலும் பாரிய இரும்பு தூண்கள் இரண்டினை அமைத்து அதற்கு இடைப்பட்ட 1800 அடி (சுமார் 600 மீற்றர்) தூரத்தை 2 அங்குல விட்டம் கொண்ட இரும்புக் கம்பியினால் இணைக்கப்பட்டது. மிக அபாயகரமான, அசுரத்தனமான அருவி பாய்ந்தோடும் நயாக்கராவின் ஒரு பகுதிக்கு மேலாகவே இக்கம்பி அமைக்கப்பட்டது. இந்த கம்பிமேல் நடக்கத்தொடங்கிய நிக் வலென்டா - 25 நிமிடங்களில் குறிப்பிட்ட தூரத்தினை கடந்து உலக சாதனை படைத்தார்.

நிக் வலென்டாவிற்கு முன்னர் 1896ஆம் ஆண்டு ஜேம்ஸ் கார்டி என்பவர் நயாக்கராவின் சில பகுதியை கடந்து சாதனை படைத்திருந்தார். ஆனால் நிக் வலென்டா கடந்த அபாயகரமான நயாகரா போன்ற பகுதியை ஜேம்ஸ் கார்டி கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (படங்கள்: ஏஎஃப்பி, ரொய்டெர்)








You May Also Like

  Comments - 0

  • noor faris Saturday, 21 July 2012 10:13 AM

    துணிவே துணை

    Reply : 0       0

    roomy Wednesday, 25 July 2012 09:35 AM

    பிரமாதம்.

    Reply : 0       0

    PMM. Feroz Tuesday, 07 August 2012 04:12 PM

    நல்ல நேரம்

    Reply : 0       0

    MHM.Nahthi Monday, 03 September 2012 06:50 PM

    ஆஹா இப்படியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X