Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 11, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் மிகக் குள்ளமான பெண்ணாக இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜியோதி அம்கே எனும் யுவதி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இவரது உயரம் 2 அடி 0.06 அங்குலம் மட்டுமாகும். இது சராசரியாக இரண்டு வயது குழந்தையின் உயரமாகும்.
இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்த பிரிஜெட் ஜோர்டன் எனும் வயது 22 பெண் உலகின் மிகக் குள்ளமானவராக விளங்கினார். பிரிஜெட் ஜோர்டன் 2 அடி 3 அங்குலமுடையவர்.
ஜியோதி அம்கே, தனது 18 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் நிலையில், உலகின் மிகக் குள்ளமான பெண்ணாக கின்னஸ் சாதனை நூலில் பதிவுசெய்யப்பட்டமைக்கான தனது சாதனை சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'புதிய உலக சாதனையுடன பிறந்த நாள் கொண்டாடுவது அற்புதமானதாகும். இது உண்மையில் எனது பிறந்த நாள் பரிசு. நான் இந்த உயரத்தைக் கொண்டிருப்பதை பெரிய விடயமாக கருதுகின்றேன். நான் இவ்வாறு குள்ளமாக இல்லாவிடின் நிச்சயமாக இந்த சாதனையை அடைந்திருக்க முடியாது' என ஜியோதி அம்கே தெரிவித்துள்ளார்.
உலக வரலாற்றில் மிக குள்ளமான பெண்ணாக பௌலின் மஸ்டர்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1895 ஆம் ஆண்டு மரணமடைந்த பௌலின் மஸ்டர்ஸின் உயரம் 2 அடி மாத்திரமேயாகும்.
zain naseem Tuesday, 20 December 2011 08:59 PM
மனத்திருப்தி என்பதே வாழ்வின் பெரிய சொத்தாகும்.
Reply : 0 0
emarat Wednesday, 21 December 2011 09:55 PM
குள்ளமா இருந்தாலும் குஷியா இருக்கார் .......... வாழ்த்துகள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
3 hours ago