Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 11, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 15 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் உலகில் அதிக நீளமான கைவிரல் நகங்களைக்கொண்ட பெண்ணென கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த கிறிஸ்டைன் வோல்டன் என்ற 45 வயதான இப்பெண்ணின் கைவிரல் நகங்களின் மொத்த நீளம் 19அடி, 9 அங்குலமாகும். இவரது வலது கை நகங்களின் நீளம் 9 அடி 7 அங்குலமும், இடது புறத்திலுள்ள நகங்களின் நீளம் 10அடி 2அங்குல நீளமாகவும் காணப்படுகின்றது.
தொழிற்சார் பாடகரான கிறிஸ்டைன் தனது 18 ஆவது வயதில் நகங்களை வளர்ப்பதற்கு ஆரம்பித்துள்ளார்.
இவர் தனது நீண்ட நகங்களை வைத்துக்கொண்டே தன்னை அழகுப்படுத்திக்கொள்ளுதல், வீட்டு வேலைகள் என்பவற்றையும் செய்துக்கொள்கின்றார்.
'எனக்கு வீட்டை சுத்தம் செய்வது பிடிப்பதில்லை. ஆனாலும் அதை நான் செய்கிறேன். மற்றும் எனது மேக்கப்பை சிறப்பாக செய்துகொள்வேன்' என கிறிஸ்டைன் தெரிவித்துள்ளார்.
இவருக்கு முன் உலகிலே அதிக நீளமான கைவிரல் நகங்களைக் கொண்ட பெண்ணாக அமெரிக்காவின் சோல்ட் லேக் சிட்டியை சேர்ந்த லீ ரேமன்ட் என்பவர் இடம்பெற்றிருந்தார். அவரின் நகங்களின் நீளம் 28அடியாகும். ஆனால் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்தில் அவரின் நகங்கள் முறிந்தன.
red Friday, 16 September 2011 03:50 AM
மனிதனாக வாழ மனிதனுக்கு தெரியவில்லை.
Reply : 0 0
pma Friday, 16 September 2011 03:59 PM
உன்னை சுத்தம் பண்ணுவது யாரு?
Reply : 0 0
Rahumathulla Sunday, 18 September 2011 05:00 AM
பேய் பிசாசுகளின் பரம்பரையில் பிறந்திருப்பாரோ !
Reply : 0 0
s.m.naleem Tuesday, 20 September 2011 07:41 AM
அசிங்கங்களுக்கெல்லாம் கின்னஸ் சாதனை. மிக விரைவில் உலகம் நாறிவிடும். மக்கள்தான் தங்களை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்.
Reply : 0 0
nawavi Friday, 16 December 2011 01:54 PM
தான் ஒரு பைத்தியக்காரி என நாளாந்தம் பல மக்களால் நற்பெயர் வாங்கிக்கொள்ளும் பெண்...
Reply : 0 0
shamry Saturday, 04 February 2012 01:06 PM
moothevi
poi
நகம்
vettu
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
3 hours ago