Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 11, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூன் 12 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிக குள்ளமான மனிதராக பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜன்றே பலவிங் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸின் தென் பிராந்திய நகரான சிந்தாங்கனில் வசிக்கும் ஜன்றேவின் உயரம் 2 அடிகளுக்கும் குறைவாகும். குழந்தைப் பருவத்திற்குப் பின் அவர் வளரவே இல்லை. இன்று அவரின் உயரம் அளவிடப்படட்டபோது 23.5 அங்குலம் (59.93) சென்ரி மீற்றர் உயரமானவராக இருந்தார்.
இதுவரை நேபாளத்தைச் சேர்ந்த 26.4 அங்குல உயரமான கஜேந்திரா தாபா மாகர் உலகின் மிக குள்ளமான நபராக விளங்கினார். அவரைவிட ஜன்றே பலவிங் உயரம் குறைவானவராக இருந்தபோதிலும் கின்னஸ் விதிகளின்படி அவர் உலகின் மிக குள்ளமான நபர் என அங்கீகரிக்கப்படுவதற்கு 18 வயதுவரை காத்திருக்க நேரிட்டது.
அதன்படி இன்று 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜன்றே பலவிங் தனது 18 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியபோது அவர் உலகின் மிகக் குள்ளமான சாதனையாளராக கின்னஸ் சாதனை நூல் வெளியிட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டார். இன்று பிலிப்பைன்ஸின் சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
(Photos: AFP)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
3 hours ago