2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஒரு மைல் நீளமான நூடுல்ஸ்

Kogilavani   / 2011 மார்ச் 16 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில் தேர்ந்த சமையல் நிபுணர்கள் பலர் இணைந்து உலகின் மிக நீளமான நூடுல்ஸை தயாரித்து கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர். 

இந்த நூடுல்ஸானது ஒரு மைலுக்கும் அதிகமான நீளம் கொண்டது.

1,704 மீற்றர் நீளம் கொண்ட இந்த நூடுல்ஸானது சீனாவின் தென்மேற்கு பகுதியில் யுனான் மாகாணத்தில் உள்ள டாலி பாய் நகரில் 25 நிமிடத்தில் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

15 கிலோகிராம் கோதுமை மா மற்றும், 2.5 கிலோகிராம் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த மிக நீளமான நூடுல்ஸை தயாரித்துள்ளார்கள்.

இந்த நூடுல்ஸானது சமையல் நிபுணர் சூ என்பவரின் தலைமையில் தயாரிக்கப்பட்டது.  மற்றும் இதில் 1000 சமையல் கலை நிபுணர்கள் பாரம்பரிய சமையல் உடையை அணிந்தவாறு இந்த நூடுல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நூடுல்ஸானது, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இத்தாலியில் இடம்பெற்ற செஸ்டன்ட் நிகழ்வில் தயாரிக்கப்பட்ட 100 மீற்றர் நீளமான நூடுல்ஸின் சாதனையை முறியடித்துள்ளது


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X