Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 15 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அதிக எண்ணிக்கையான மார்பக அழகு சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு உலக சாதனை படைத்துள்ளார்.
டெட் ஐசன்பேர்க் எனும் இம்மருத்துவர் இதுவரை 3,460 மார்பக சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இதனால் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழும் அவருக்கு கிடைத்துள்ளது.
58 வயதுடைய டாக்டர் ஐசன்பேர்க், உலகில் மார்பக சத்திரசிகிச்சைகளில் மாத்திரம் கவனம் செலுத்திவரும் ஒருசில மருத்துவர்களில் ஒருவர். தனது தொழிலை மிகவும் நேசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
'நான் அந்த சிகிச்சைகளை சிறப்பாக செய்கிறேன். அத்துடன் அதற்கு உடனடி பெறுபேறு கிடைப்பதில் நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன்' என்கிறார் ஐசன்பேர்க்.
பிலடெல்பியாவிலுள்ள இவரின் சிகிச்சை நிலையத்திற்கு உலகெங்கும் இருந்து பெண்கள் மார்பக சத்திரசிகிச்சை செய்வதற்காக வருகின்றனர்.
'மொடல் அழகிகள் இ தாய்மார்கள்இ வர்த்தகத்துறை சார்ந்த பெண்மணிகள் என பலர் சிகிச்சைக்காக வருகின்றனர். பிளேபோய் மொடல் ஒருவரும் சிகிச்சைக்கு வந்தார்' என ஐசன்பேர்க் தெரிவித்துள்ளார்.
மார்பக சத்திரசிகிச்சையில் உலகப் புகழ் பெற்ற இந்த நிபுணரின் பொழுதுபோக்கும் கத்தியுடன் சம்பந்தப்பட்டது.
அவர் ஓய்வு நேரங்களில் கத்தி எறியும் விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு முதல் கத்தி எறியும் போட்டிகளிலும் அவர் பங்குபற்றி வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago