2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

127 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய பெண்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் அதிக வயதுடையவராக கருதப்படும் சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 127 ஆவது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடியுள்ளார்.

சீனாவில் தென்பிராந்தியமான குவாங்ஸி மாகாணத்தில் வசித்து வரும் லோ மெய்ஸென்  எனும் இப்பெண், தனது 61 ஆவது வயதில் மகனொருவரை பிரசவித்தததாக கூறுகிறார். அம்மகனுடனேயே அவர் தற்போது வசித்து வருகின்றார்.

சீனாவின் சந்திர நாள்காட்டியின் படி 1885 ஆம் ஆண்டு ஜூலை 9  ஆம் திகதி  பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாள்காட்டியின்படி அத்தினம் 1885 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 27 ஆம் திகதியாகும்.

சீனாவின் பாமா பகுதியானது நீண்ட ஆயுளை கொண்டவர்கள்  அதிகமாக வாழும் இடமாக விளங்குகிறது. 2000 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி அங்கு  238,000 பேரே வசிக்கின்றனர். ஆனால் அங்கு நூறு வயதை கடந்த 74 பேர் இருந்ததாக கணிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த பெஸ் கூபர் என்ற வயோதிப பெண் கடந்த  26 ஆம் திகதி  தனது 116 பிறந்ததினத்தை கொண்டாடினார். இவரே தற்போது உலகின் அதிக வயதான நபராக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குடும்பம் மற்றும் நண்பர்கள் சகிதம் வாழும் இவர்,  'நான் எனது வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவேன், வேண்டாத உணவுகளை தவிர்த்துக்கொள்வேன்' என தனது  நீண்ட ஆயுள் குறித்த இரகசியத்தை கின்னஸ் உலக சாதனை நூல்வெளியீட்டாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸை சேர்ந்த ஜீன் கிளென்ட் எனும் பெண் 122 வயது மற்றும் 164 நாட்கள் வாழ்ந்தபின் 1997 ஆம் ஆண்டு இறந்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X