Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 17 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
12 அங்குலம் உயரத்திற்கு மாத்திரம் நீரைக் கொண்ட மிகச்சிறிய நீர்தொட்டியில் 36 அடி உயரத்திலிருந்து குதித்து சுழியோடியொருவர் சாதனை படைத்துள்ளார்
மிகவும் ஆழமான நீர்தொட்டியில் கூட 36 அடி உயரத்திலிருந்து குதிப்பது சவாலானது.
ஆனால், இவர் 12 அங்குல நீர் மட்டுமே நிரம்பிய நீர்தொட்டியில் அவ்வளவு உயரத்திலிருந்து குதிப்பது மிகவும் திகிலானதாகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த டெரன் டெய்லர் என்பவர் நோர்வையின் ட்ரொன்தேய்ம் நகரில் பிள்ளைகளின் நீச்சல் தொட்டியொன்றில் இவ்வாறு குறித்து சாதனைப் படைத்துள்ளார். இவர் 'புரொபெஷர் ஸ்பிளாஸ்' என அழைக்கப்படுகிறார்.
இச்சாதனை டெரன் டெய்லரின் 13 ஆவது கின்னஸ் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இச்சிறிய நீர்த்தொட்டியில் குதிக்கும் போது உடல் மீதான தாக்கத்தை குறைப்பதற்காக விசேடமான சுழியோடும் நுட்பத்தை பயன்படுத்தினார்.
அவர், உலகில் புகழ்பெற்ற சுழியோடும் நபராக விளங்குகிறார். கடந்த 25 வருடங்களாக அவர் சுழியோடும் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
தனது புதிய சாதனை குறித்து டெய்லர் தெரிவிக்கையில் ' இந்த மிகச்சிறிய நீச்சல் தடாகத்தின் அடித்தளம் காற்றடைக்கப்பட்டதல்ல. அப்படியான அடித்தளத்தில் குதிப்பது கின்னஸ் விதிகளுக்கு முரணானதாகும்' என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் தடாகத்தின் அடியில் சில மெத்தைகள் வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்
' இப்படி குதிக்கும்போது, குறித்த நாளின் நேரம், காற்று, குளிர் என்பவை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனது நுட்பத்தின் மூலம் ஒவ்வொரு குதிப்பையும் உலக சாதனையாக மாற்ற முடியும். ஆனால் அது இனி இலகுவானதாக இருக்க மாட்டாது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்கிறார் டெய்லர்.
Fahim Saturday, 19 March 2011 04:32 AM
சில பைத்தியக்காரத்தனங்களை எல்லாம் சாதனை என்று கூறக் கூடாது.
Reply : 0 0
rasvin Sunday, 20 March 2011 01:38 AM
எப்படி எல்லாம் சாதனை புரிகின்றார்கள்
Reply : 0 0
jaliyath Sunday, 20 March 2011 06:29 PM
இது எல்லாம் சாதனை என்றால் சாதனைக்கு என்ன சொல்வது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago