Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 11, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 05 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
102 ஆவது தினத்தை கொண்டாடிய இரட்டை சகோதரிகள் இருவர் உலகின் மிக வயதான இரட்டையர்கள் என்று கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
ஈனா புக் மற்றும் லில்லி மில்வார்ட் ஆகிய இச்சகோதரிகள் ஜனவரி 4 ஆம் திகதி தமது 102 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளனர். இவர்கள் 1910 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி பிறந்தவர்களாவர்.
இவர்களுக்கு 102 ஆவது பிறந்த தினப் பரிசாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் பிரதிகள் வழங்கப்பட்டன.
இச்சகோதரர்களில் ஒருவரான லில்லி அண்மையில் துரதிஷ்டவசமாக இடுப்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. லில்லியைப் பார்ப்பதற்கு அவரின் சகோதரி ஈனா வைத்தியசாலைக்குச் சென்றார்.
லில்லியின் 65 வயதான மகள் இது குறித்து தெரிவிக்கையில், 'எனது தாய் கிறிஸ்மஸ் தினத்தன்று கீழே விழுந்து இடுப்பில் முறிவு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உலகின் மிக வயதான இரட்டையர்கள் சகோதரிகள் என்ற சாதனையை நிலைநாட்டியதை எண்ணி அவர் உற்சாகமடைந்துள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
3 hours ago