Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 15, சனிக்கிழமை
Simrith / 2023 நவம்பர் 24 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு தரவையிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார்.
இந் நாட்டில் மக்களின் வரிகளை பெற்றுக்கொண்டு மாளிகைகளும் கோபுரங்களும் கட்டி வைத்துள்ள இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ மேலதிகாரிகளின் பாதுகாப்புக்கென பாரிய நிதி செலவிடப்படுகின்றது.
இருப்பினும் இவர்களும் இப்பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்படுள்ளனர். ஆனால் இவர்களின் தற்போதைய செயல்பாடுகள் ஆனது இன விரோதத்தை மென்மேலும் தூண்டும் விதமாகவும் அவமரியாதை செய்யும் விதமகாவும் அமைந்துள்ளது.
தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டதை நான் மிகவும் துக்ககரமான சம்பவமாக கருதுகின்றேன்.
ஓர் இனத்துக்காக இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும் இந்த இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிக்கும் விடயமாகும். அவர்களின் குடும்பத்தார் உறவினர்கள் பிள்ளைகளின் மனநிலையை யோசித்துப் பாருங்கள் என சாணக்கியன் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago