2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

R.Tharaniya   / 2025 மார்ச் 16 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை தவிர்ந்த 18 சபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல்  ஆரம்பமாகவுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது என்று அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக திங்கட்கிழமை (17) முதல் 20 ஆம் திகதி வரை அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 04 மற்றும் உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை 20ஆகும்.

ஆனால் , கல்முனை மாநகர சபை மற்றும் தெஹித்தக்கண்டிய பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நீதிமன்ற காரணங்களால் தற்போது நடைபெறமாட்டாது. ஏனைய 18 சபைகளுக்கான தேர்தல் நடைபெறும்.

 கடந்த 2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர் என்பதும் அம்பாறையில் 188222 பேர், சம்மாந்துறையில் 99727 பேர், கல்முனையில் 82830 பேர், பொத்துவில் தொகுதியில் 184653 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.ரி.சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X