2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

வெளிச்சங்களுடனான வீதிகள்

Janu   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று  பிரதான  வீதியில்  கடந்த  சில   மாதங்களாக  ஒளிராமல்  செயலிழந்து  காணப்பட்ட  தெரு மின்  விளக்கு  தொகுதிகள்  தற்போது  துரிதமாக  திருத்தம்  செய்யப்பட்டு  வருவதாக, அக்கரைப்பற்று  மாநகர  ஆணையாளர் என்.எம். நௌபீஸ் புதன்கிழமை (02) தெரிவித்தார்.

இதன் பிரகாரம்  அக்கரைப்பற்று  ஆதார  வைத்தியசாலை  தொடக்கம்  தைக்கா  நகர்  வரையிலான  பிரதான  வீதியில்  மின்குமிழ்கள்  புதிதாக  பொருத்தப்படப்பட்டு,  ஒளியூட்டப்பட்டுள்ளன.

இவ் வேலைத்  திட்டத்தின்  கீழ்  கட்டம்  கட்டமாக  அனைத்துப்  பகுதிகளிலும்  தெரு  விளக்கு  தொகுதிகள்  திருத்தி அமைக்கப்படவுள்ளதாக அக்கரைப்பற்று  மாநகர  ஆணையாளர் தெரிவித்தார்.  

அக்கரைப்பற்று  மாநகர  சபைக்குட்பட்ட  கடற்கரை  பிரதேசங்களில்  மக்கள்  ஒன்று கூடுகின்ற  பல முக்கிய இடங்கள்  பிரகாசமிக்க  மின்விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளன.

கடற்கரைப்  பகுதிகளுக்கு  வருகை தருகின்ற  பொது  மக்களின்  பாதுகாப்பு  மற்றும்  நலன்களை  கருத்தில்  கொண்டும்  குற்றச்  செயல்களை  தடுக்கும்  நோக்கிலும்  இதற்கான  நடவடிக்கைகளை   முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரு  தொகுதி  பிரகாச  மின் விளக்குகள்  கொள்வனவு  செய்யப்பட்டு,  அவை  அக்கரைப்பற்று  மாநகர  சபை  எல்லைக்குட்பட்ட  கடற்கரை  பிரதேசங்களில்  மக்கள்  பொழுது போக்கிற்காக  ஒன்று கூடுகின்ற  பகுதிகளில் துரிதமாக பொருத்தப்பட்டு, ஒளியூட்டப்பட்டுள்ளது.

கடற்கரை  வீதியில்  ஏற்கனவே  பொருத்தப்பட்டிருக்கும்  தெரு  விளக்குகளுக்கு  மேலதிகமாக கடற்கரைப்  பகுதிகளை  நோக்கியதாக  இந்த  புதிய மின் விளக்குகள்  பொருத்தப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 எம்.எஸ்.எம்.ஹனீபா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X