2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

வீடமைப்புத் திட்டத்தை வழங்கக் கோரி மகஜர்

Janu   / 2024 டிசெம்பர் 26 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வசித்து வரும் மக்களும் அம்பாறை மாவட்ட காணி உரிமைக்கான செயலணி அங்கத்தவர்களும் இணைந்து புதன்கிழமை (25) மாலை அக்கரைப்பற்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 ஆண்டுகளாகியும் தமக்கென நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை சுனாமி வீடமைப்புத் திட்டத்தை கைளிக்குமாறு கோரி, சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் தலைவர் பி.கைறுதீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பிரதேச செயலகம் சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

மகஜரினைக் கையேற்ற பிரதேச செயலாளர் இதனை மாவட்ட செயலாளர், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும், கடந்த 20 வருடங்களாக சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் மக்களின் துயரினை தான் நன்கு அறிவதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஏ.றமீஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X