2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

விவசாயிகள் கவனயீர்ப்பு ​​போராட்டம்

R.Tharaniya   / 2025 மார்ச் 18 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை (18) வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்பாகஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.அதாவது கண்டியனாறு, அடைச்ச கல், ஆகிய குளங்களை புனரமைக்குமாறும் வருடாந்தம்ஒதுக்கப்படும் 3 ஆயிரம் கோடி ரூபாவிற்கு நிரந்தரமான விவசாய வாய்க்கல்களை புனரமைக்குமாறு அரசாங்கம் மற்றும் விவசாய திணைக்களத்திடம்  விவசாயிகள்கோரிக்கையை முன் வைத்தனர் . 

 இதனையடுத்து மாகாண நீர்ப்பாசன திணைக்களமே வெளிப்படையாக வேலைகளை செய், கண்டியனபாறு திட்டத்தை கைவிடப்பட்டதா? அரசாங்கத்தின் நிதியினை பசளை மானியம் நஷ்டஈடு என விரயம் செய்யவா அரச அதிகாரிகள்?  ஏன் எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்ல வேண்டும், மாகாண நீர்ப்பாசன திணைக்களமே? ஊப்பாற்றில் வீணாக செல்லும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டங்களை தீட்டு.

1600 ஏக்கர் விவசாய காணி 4000 ஏக்கர் மேட்டு காணிகளுக்கு நீரை வழங்குவதற்கு ஏன் தயக்கம், விவசாயிகளை பிரித்தாளும் தந்திரம் வேண்டும், அரசாங்க அதிபரின் அராஜகம் ஒழிக? , பிரதேச அபிவிருத்தியின் நிலை என்ன பிரதேச செயலாளரே? மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதே அதிகாரிகளின் கடமையா? விவசாயிகளே விழித்து தொழுங்கள் போன்ற வாசகங்கள் ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X