2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

விபத்தை ஏற்படுத்திய சாரதி சரண்

Janu   / 2024 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேன் விபத்தில் சிறுவன் மரணித்த சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த வேன் சாரதி திங்கட்கிழமை (19) அன்று வாகரை பொலிஸார் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை (17)  அன்று ஓட்டமாவடி - மீராவோடை பகுதியைச் சேர்ந்த எஸ்.மஹ்தி என்ற சிறுவன் இவ் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார் .

இந் நிலையில் விபத்தை ஏற்படுத்திய வேன் சாரதி வேனுடன் தலைமறைவாகியிருந்தத்துடன் அவரை கைது செய்ய வாகரை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், மூன்று நாட்களின் பின்னர் சாரதி வாகரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேலும் குறித்த சாரதியை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X