2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Janu   / 2024 ஜூன் 30 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் -  பதுளை வீதியில் ,மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது .

செங்கலடி சேனைக்குடியிருப்பை சேர்ந்த , இரு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய தோமஸ் டயஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

குறித்த நபர் தொழில் நிமித்தம் பெரிய புல்லுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது , எதிரே வந்த மினி வேன், பாதை மாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .

வேன் சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், வேனின் சாரதியை கைது செய்த கரடியனாறு பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .