Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 06 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் கடந்த சனிக்கிழமை (05) மாலை இடம்பெற்றுளள்துடன் குறித்த விபத்தில் சம்மாந்துறை விளினியடி 03 பகுதியை சேர்ந்த அசனார் முகம்மட் இஸ்மாயில் (வயது 64) என்பவர் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது உழவு இயந்திரம் வயலை உழுது விட்டு வீடு திரும்பும் வழியில் இடம்பெற்றுள்ளதுடன் உழவு இயந்திரத்துடன் மோதிய கனரக வாகனத்தின் சாரதி சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் மரணமடைந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
18 Apr 2025
18 Apr 2025