2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

Janu   / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை, பொலனறுவை வீதியிலுள்ள மியான்குளம் பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம்  புதன்கிழமை (4) இரவு இடம்பெற்றுள்ளது.

புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய  கனகசூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் புனானை ஓமனியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த மூவர்  படுகாயமடைந்த  நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X