2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கியதில் ஒருவர் மரணம்

Janu   / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர்   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் வயல்   வேலைக்குச் சென்ற ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (28)  காலை இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர் - 02 இரண்டாம் குறுக்குத் தெரு பிரிவைச் சேர்ந்த திருமணமாகாத 62 வயது மதிக்கத்தக்க  மீராலெப்பை முகம்மது முஸ்தபா என்ற  நபரே   இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை(20) மாலை மணல் அகழ்வு வேலைக்குச் சென்ற நிந்தவூர், 21ஆம் பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா நவாசிம் என்ற  குடும்பஸ்தரும் யானை தாக்குதலுக்குள்ளாகி  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X