2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்து; இருவர் படுகாயம்

Janu   / 2025 ஜனவரி 28 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் உட்பட இருவர் காயமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) காலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியால் மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக பயணித்துள்ளதுடன் அவ்வீதியால் சென்ற பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்  மோதியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞனும் படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்துக்குப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .