2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மாயமான சிறுவன் வீட்டுக்குத் திரும்பினான்

Janu   / 2024 ஜனவரி 03 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பகுதியில் திங்கட்கிழமை (01) காலை காணாமல் போன 14 வயதுடைய சிறுவன் வீடு வந்துள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் சென்ற குறித்த சிறுவன் முச்சக்கரவண்டி ஒன்றில் மோதுண்டதில் சிறுவனை ஆட்டோ சாரதி தடுத்து வைத்து சிறிது நேரத்தின் பின்னர் விடுவித்துள்ளார்.

இவ்வாறு விபத்துக்குள்ளான சிறுவன் வீடு செல்லும் பயத்தில் தலைமறைவாகியுள்ளதாகவும் சிறுவன் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,   செவ்வாய்க்கிழமை (02) இரவு 8 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .