2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

மாடுகளை கடத்தி ​சென்ற மூவர் கைது

R.Tharaniya   / 2025 மார்ச் 03 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரமின்றி போலியான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மாடுகளை ஏற்றி வந்த மூவரை திங்கள்கிழமை காலை (3) காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிரேஸ்ட குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே எம் இக்பால் தெரிவித்தார் 

ஏறாவூரிலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு போலியான அனுமதி பத்திரத்தைப் பயன்படுத்தி 9 மாடுகளை அடைத்து சிறிய வாகனம் ஒன்றில் அடைத்து வைத்த நிலையில் ஏற்றி வந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த வாகனத்திலிருந்து 9 மாடுகள் உடல் பலவீனமான முறையில் மீட்கப்பட்டுள்ளன. சில மாடுகளில் காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிருகவதை சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் 

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X