2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

மட்டு.போக்குவரத்து பாதிப்பு

R.Tharaniya   / 2025 மார்ச் 16 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (16)காலை தொடக்கம்  பெய்து வரும் மழை காரணமாக தாழ்நிலை பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்குமுன் பெய்த மழை காரணமாக  வாழச்சேனை, கிரான்,செங்கலடி, வெல்லாவெளி, போன்ற தாழ்நிலைப் பகுதிகளில் மழைநீர் காணப்பட்ட போதிலும் ஞாயிற்றுக்கிழமை(16) பெய்த மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிரான், வாகரை,செங்கலடி, போன்ற பகுதிகளில் மக்கள் போக்குவரத்து செய்யும் பிரதான பாதைகள் ஊடாக வெள்ள நீர் தேங்கி காணப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிரான்பகுதியில் கோரகல்லிமடு, புலிபாய்ந்த கல்,  போன்ற பகுதிகளைச்சேர்ந்தஅங்குள்ளமக்கள்இதனால்பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளதுடன்போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளது. இப்பகுதி இராணுவத்தினரின் உதவியுடன் பிரதேசசெயலகத்தினால் படகுச் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் பல ஏக்கர்காணிகளில் தற்போது சிறு போக வேளாண்மை செய்கை ஆரம்பக்கட்ட பணிகள்முன்னெடுக்கப்பட்டு வருவதால் இப்பகுதியில் செல்லும் விவசாயிகள் பொதுமக்கள்நோயாளிகள் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதேவேளை படுவான்கரைப்பகுதியில் சிறு போக வேளாண்மை செய்கை க்கு தயாராக இருந்த நெல் காணிகளும் தற்போதுவெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் விவசாயிகள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.

.சக்தி   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X