Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 18 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலிலும்,பாராளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வர முன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஊழல் என்கின்ற போர்வையில் கடந்த கால அரசாங்க தலைவர்களை பழிவாங்க நினைக்கிறார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தை திங்கட்கிழமை(17) மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்யாது இருப்பது மேலும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அதன் பின்பு அமைச்சரவையில் ஆகக் கூடுதலாக ஏழு அமைச்சர்கள் இருந்துள்ளார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் 2000,2001,2004 ம் ஆண்டு மற்றும் 2015 தொடக்கம் 2019 களில் ரணில் விக்ரமசிங்க காலத்தில் அமைச்சரவையில் இருந்துள்ளார்கள் இன்று பெரும்பான்மை சமூகத்தில் வாக்குகள் அளித்த முஸ்லீம் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது . அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லை கிளீன் சிறிலங்கா திட்டத்தில் 18 பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்ற போதிலும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை .
தற்போது முஸ்லிம்களின் ஷரீஆ பர்தா விவகாரங்களில் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் உட்பட பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களும் புரியாதபடி பேசுகிறார்கள் மற்றும் கல்முனையில் பயங்கரவாத அடிப்படை வாத கொள்கை என்கின்ற விடயங்கள் முஸ்லிம் சமூகத்தை மாத்திரமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த தேர்தலில் ஜனாதிபதி, பிரதமர் அல்லது பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தேர்தல் அல்ல முஸ்லிம் சமூகத்தை மாற்றியமைக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது .மூதூர் தொகுதியில் கடந்த தேர்தலின் போது 56000 வாக்குகளை வழங்கியுள்ளது இதற்காக இந்த தொகுதிக்கு தேசிய பட்டியலை முஸ்லிம் சமூகத்துக்கு அரசாங்கம் வழங்கியிருக்க வேண்டும் நடை பெற்று முடிந்த தேர்தலில் முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களின் வாக்குகள் குறைந்து தோல்வி நிலையில் வெற்றியீட்டியுள்ளார்கள் இதை வைத்து முஸ்லிம் சமூகம் நல்லதொரு பாடத்தை கற்றுள்ளது எனவே தேசிய மக்கள் சக்திக்கு விழிப்புணர்வுள்ள தேர்தலாக இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சி இம் முறை திருமலை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும் என்றார்.
ஏ.எச்.ஹஸ்பர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago
8 hours ago