2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

போதைப்பொருட்களை விநியோகித்த ஆலா கைது

Janu   / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்கள் மற்றும்  இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று செவ்வாயக்கிழமை (5) உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை - பெரியநீலாவணை பொலிஸாருக்கு  திங்கட்கிழமை  (04) இரவு கிடைக்கப்பெற்ற விசேட தகவல் ஒன்றிக்கமைய  மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது,  ஆலா என அழைக்கப்படும் 39 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர்  என்ற நபரை  100 கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஆலாவை சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதீவான் உத்தரவிட்டுள்ளார். 

 பாருக் ஷிஹான்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .