2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

போதை மாத்திரையுடன் ஒருவர் கைது

R.Tharaniya   / 2025 மார்ச் 17 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்காயிரம் போதை மாத்திரைகளுடன்  வர்த்தகர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாயக்கா தெரிவித்தார் .

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பத்ர் பள்ளி வீதியில் உள்ள வீட்டில் வைத்து குறித்த போதை மாத்திரைகளை சந்தேக நபர் விற்பனை செய்து வந்துள்ளார். 35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான ஒருவரை  ஞாயிற்றுக்கிழமை (16)பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான நான்காயிரம் போதை பொருள் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன . மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலி ரத்னாவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி ரத்நாயக்கவின் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதலின் பின் இப் போதை மாத்திரைகளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதிமான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை(17)ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார்  தெரிவித்தனர் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X