2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பொதுக்கிணறு திறந்து வைப்பு

Janu   / 2024 மே 20 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் வை.டப்ள்யூ.எம்.ஏ. பேரவையின் ஒருங்கிணைப்பில் கட்டப்பட்ட பொது கிணற்றை திறந்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(19) இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ரஹ்மத்பவுண்டேஷனின் ஸ்தாபகருமான ரஹூமத் மன்சூரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற நிகழ்வுக்கு  இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர் எச்.இ. பட்லி ஹிஷாம் ஆதம் பிரதம அதிதியாகவும், வை. டப்ளியூ.எம்.ஏ. அமைப்பின் தலைவி பவாஸா தாஹா கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கருகாமையில் மீனவர் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் இப் பொது கிணற்றை பயன்படுத்துவதுடன் கலந்து கொண்ட அதிதிகளினால் கிணற்றுக்கருகாமையில் தென்னை மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

எம்.எப்.றிபாஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .