Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 12 , மு.ப. 10:26 - 0 - 55
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டு மாகாண இலக்கிய விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் சமூக விஞ்ஞானம் (ஆயுள்வேதம்) "சாஹித்ய மாகாண விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க தலைமையில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற இவ்விழாவின் போது கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீலினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம், சான்றிதழ் மற்றும் காசோலை போன்றன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பொதுமக்களுக்கு நோய் பற்றிய தெளிவையும், அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெற்றுக்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வுகளையும் வழங்கும் நோக்கில், துறைசார் வைத்திய நிபுணர்கள் ஊடாக பெற்றுக்கொண்ட மருத்துவ ஆக்கங்களை "நலன் தரும் மருத்துவம்" என்ற பெயரில்,சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் தொகுத்து வெளியீடு செய்திருந்தார்.
குறித்த நூல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பட்டு "சமூக விஞ்ஞானம்" (ஆயுள்வேதம்) "சாஹித்ய மாகாண விருது வழங்கி கௌரவித்தனர்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க ஆகியோருடன் கெளரவ அதிதிகளாக அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில், கடந்த மூன்று வருடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago