Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 30 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் காத்தான்குடிக்கு திங்கட்கிழமை (29) விஜயம் செய்து காத்தான்குடி பீச் வே ஹோட்டலில் வைத்து காத்தான்குடியிலுள்ள பிரமுகர்கள் சிலரை சந்தித்துள்ளார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அஷெஷய்ஹ் இல்ஹாம், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை செயலாளர் ரிப்கா ஷபீன் காத்தான்குடி பெண்கள் காப்பகத்தின் தலைவியும் பெண் சமூக செயற்பாட்டாளாருமான சல்மா ஹம்சா முன்னாள் போர் நிறுத்தக் கண்கானிப்புக்குழு உறுப்பினரான இஸ்ஸதீன் மற்றும் நகர சபை உத்தியோகத்தர் சப்ரி அகமட் ஆகியோரை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்தித்துள்ளார்.
இதன் போது தற்போதைய காத்தான்குடியின் நிலை, காத்தான்குடி மக்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிலவரம் பற்றி கேட்டறிந்து கொண்டதாக காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்துள்ளார் .
எம். எஸ். எம். நூர்தீன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
30 minute ago
33 minute ago
36 minute ago