2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைது

Janu   / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 04:42 - 0     - 42

மட்டக்களப்பு, ஏறாவூரில் பொலிஸார் மேற்கொண்ட  விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றின் போது  நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 8 பேர்  புதன்கிழமை (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மாவட்டத்தில் பல குற்ற செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதேசத்தைச் சேர்ந்த பலர் அந்தந்த நீதிமன்ற நியாயதிக்க எல்லையிலுள்ள  நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த பின்னர் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் வந்துள்ளவர்களுக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்தவர்களை தேடி கண்டு பிடிக்கும் விசேட சுற்றிவளைப்பின் போதே 8 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கனகராசா சரவணன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X