2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவனயீர்ப்பு

R.Tharaniya   / 2025 மார்ச் 31 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோன்பு பெருநாள் தினமாகிய திங்கட்கிழமை (31) அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்புப்  பெருநாள் தொழுகையை தொடர்ந்து  பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து  பேரணி ஒன்று இடம் பெற்றது.

இஸ்ரேலுக்கு எதிரான இக் கண்டனப் பேரணியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல கோசங்களையும் எழுப்பியிருந்தது டன் இதனை திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்திருந்தார்.  இதன் போது பலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் கலந்து கொண்டனர் .

இதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து கொண்ட பலஸ்தீனத்துக்கு ஆதரவான மற்றுமொரு நிகழ்வும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி vc மைதானத்தில்  இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த எம்.எம்.மஹ்தி பாலஸ்தீன மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டு புனிதமான இந்த நாளிலே இருக்கிறார்கள்.இஸ்ரேல் இன அழிப்பு விடயத்தை செய்து கொண்டிருக்கின்றது. இதனை இந்த  நாடு கண்டிக்க வேண்டும் என்பதுடன் ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் .

அண்மையில் முஹம்மது ருஸ்தி எனும் இளைஞன் ஸ்டிக்கர் ஒட்டியதற்காக  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் எனவே ஜனாதிபதி இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக இளைஞனை விடுதலை செய்ய வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு அநுர அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும். பாலஸ்தீனர்களுக்கு   தனி நாடு , தனி இராஜ்ஜியம் என்ற அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் .இன அழிப்பை செய்யும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கும் நிலை காணப்படுகின்றது.

ஆகவே கைது செய்யப்பட்ட  முஹம்மது ருஸ்தி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம்.தற்போதைய அரசாங்கமும் பாலஸ்தீன மக்களுக்கு குரல் எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

ஏ.எச் ஹஸ்பர்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X